July 27, 2024
  • July 27, 2024
Breaking News
July 30, 2018

ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடும் சவால்

By 0 876 Views
Raghava Lawrence

Raghava Lawrence

சினிமா பிரபலங்களைப் பற்றிய பாலியல் புகார்கள் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ்ப்பிரபலங்களும் அடங்குவர்.

இதில் சுந்தர்.சி மட்டும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, மற்றவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மற்றும் சமூக சேவகரான ராகவா லாரன்ஸ் நேற்று ஸ்ரீரெட்டி புகாருக்கு பதிலாக ஒரு அறிக்கை விடுத்தார். அதிலிருந்து…

“நான் இந்தப் புகாரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஆனால், தொடர்ந்து மீடியாவிலிருந்து எனக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லிக் கேட்பதனால் இந்த அறிவிப்பை அளிக்கிறேன். ஸ்ரீரெட்டி என்னைப் பற்றிய அவதூறு கூறியது என் தெலுங்குப்படமான ‘ரெபல்’ படத்தின் போது. அந்தப் படம் 7 ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால் அப்போதே புகார் கூறியிருக்கலாமே..?

அவரது தொடர்ந்த புகார்களைக் கேட்கும்போது ஒன்று தெளிவாகப் புரிகிறது. அவர் பட வாய்ப்புகளுக்காகத்தான் இப்படி செய்கிறார் என்பதுதான் அது. அவருக்கு வாய்ப்புத் தர நான் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். ஆனால், அவர் பத்திரிகையாளர்கள் முன்பு அதை நிறைவேற்ற வேண்டும். நான் தரும் காட்சியில் நடித்தும், நான் ஆடச்சொல்லும் அசைவுகளுக்கு ஏற்ப அவர் பத்திரிகையாளர்கள் முன்னால் நடனமாடவும் வேண்டும். 

அதற்காக நான் ஆட முடியாத அளவுக்கு கஷ்டமான நடன அசைவுகளைத் தரமாட்டேன். அவர் நடிக்கும் தகுதியுடன் இருக்கிறாரா என்பதற்கான தேர்வு அது. அத்ற்கு ஒத்துக்கொண்டு அதில் அவர் தேர்ச்சி பெற்றால் என் அடுத்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்புத் தருகிறேன். அது அவருக்கு மேலும் வாய்ப்புகளைப் பெற வசதியாகவும் அமையும்.

கடந்த 13 ஆண்டுகளாக நான் ஆதரவற்ர குழந்தைகளின் நலன் காத்து வருவது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் புகாருக்கு பதிலளித்து அவருக்கு வாய்ப்புத் தர தயாராக இருக்கிறேன் என்றால் என் அனைக்குக் கோயில் கட்டிய நான் பெண்களின் மேல் வைத்துள்ள மதிப்பின் காரணமாகத்தான்..!”     

இதற்கு ஸ்ரீரெட்டி என்ன சொல்லப் போகிறார்..?