March 24, 2025
  • March 24, 2025
Breaking News
December 29, 2018

மலேசிய பந்தய கார்களில் பேட்ட பட விளம்பரம்

By 0 779 Views

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.

மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ் (19) கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

அவர் ரேஸ் பஒகவிருக்கும் காரில் ‘பேட்ட’ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று வெளியான டிரைலர் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.