January 14, 2025
  • January 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இதுவரை பார்க்காத வித்தியாச தோற்றத்தில் விஜய் ஆண்டனி
December 29, 2018

இதுவரை பார்க்காத வித்தியாச தோற்றத்தில் விஜய் ஆண்டனி

By 0 744 Views

விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டேவுடன் இயக்குனர் நவீன் இணைந்திருப்பது எல்லோர் கவனத்தையும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது திருப்பியிருக்கிறது.

“தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம்.

மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர்தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, அவர் கதாபாத்திரம் அப்படிப்பட்டது. எனவே, பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம்” என்கிறார் இயக்குனர் நவீன்.

Agnis Promo

Agnis Promo

அவரிடம் படம் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி கேட்டபோது, சிறு மௌனமான புன்னகையுடன், “அவற்றைப்பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால், அக்னி சிறகுகள் எங்கள் முந்தைய திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்வேன்..!” என்கிறார்.

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா தயாரிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.