அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்… உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், […]
Read Moreமக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவிப்பு. ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பானபோது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருந்தது. அத்தனைபேரும் ராமாயணம் பார்க்க வீடுகளில் முடங்கினார்கள். ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் […]
Read Moreஇன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான். எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை மறக்க வைக்கிறது. காமெடி சேனல்களில் வரும் அவரது நகைச்சுவைப் பகுதிகளும் நம்மைக் களிப்புடனேயே வைத்திருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி […]
Read Moreதமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். வயது 37. நேற்று இரவு சென்னையிலுள்ள தனது வீட்டில் இருந்த சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு […]
Read Moreஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது . அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு […]
Read Moreஇந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இது வரும் மாதங்களில் எவ்வாளவு அதிகரிக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது. அதில், […]
Read More