December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்
March 28, 2020

கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்

By 0 601 Views

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்…

உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே.

எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்.

நன்றிகளுடன்,

உங்கள் நான்

கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.