June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்
March 27, 2020

கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்

By 0 594 Views

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல
தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன்.

எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.  வயது 37.

நேற்று இரவு சென்னையிலுள்ள தனது வீட்டில் இருந்த சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு 8.30 மணியளவில் சேதுராமன் மரணம் அடைந்தார்.

அவருக்கு மனைவி உமையாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2016, பிப்ரவரி 12ல் சேதுராமன், உமையாள் திருமணம் நடந்தது.

ஒரு மருத்துவராகவும் இருக்கும் சேதுராமன் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சில நாள்கள் முன்பு கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அது கீழே…