கடந்த ஆண்டு கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார் சாண்டி. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்…
Read Moreதமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் விரைவில் துவங்குகிறது. வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம். நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் […]
Read Moreநடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிய, பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். சரி… இந்தத் திருமணமாவது அவர் வாழ்க்கைக்கு கை கொடுக்கட்டும் என்று அனைவரும வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்துகள் அடங்குவதற்குள் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக […]
Read Moreஇயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி […]
Read Moreஇளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம். பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த […]
Read Moreசில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம். இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை வெளியிட்டு கல்லா கட்டியவர் அந்த ருசியில் அடுத்து நேக்கட் என்ற படத்தை வெளியிடுகிறார். இது தொடர்பாக அவர், “ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் […]
Read More