நேற்று முன்தினம் ஊடகங்களில் எந்திரன் கதை பற்றிய வழக்கு விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளதாக செய்திகள் வந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ஷங்கர் இன்று அதற்கான விளக்கத்தை ஒரு அறிக்கையாக அனுப்பியிருக்கிறார். அதில் தனக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்று உறுதி செய்ததுடன் அது நீதிமன்ற செய்திகள் பதிவேற்றம் செய்வதில் நடந்த கோளாறு என்று தெரிவித்திருக்கிறார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கை கீழே…
Read Moreமறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ். இப்படத்தின் […]
Read Moreசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இந்நிலையில் தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்றும் அறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால் விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஆனாலும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் […]
Read Moreஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது […]
Read Moreவேற்று மொழியில் வெற்றி பெற்ற படங்களுக்கு இன்னொரு மொழியில் வரவேற்பு அதிகமாக இருக்கும். அப்படி கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’யாக இங்கே வந்திருக்கிறது. எப்போதோ நடந்து விட்ட கொலைகளும் அவை தொடர்பான மர்மங்களுமாக ஒரு மர்டர் மிஸ்டரியாக வெளியாகி இருக்கும் படம் இது. படத்தின் புரமோஷன்களும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்க, படம் எப்படி என்று பார்க்கலாம். வழக்கமான காக்கிச்சட்டைப் போலீஸ் படங்களையே பார்த்து சலித்து விட்டதாலோ என்னவோ ஒரு வித்தியாசத்துக்காக இதில் போக்குவரத்து […]
Read Moreபலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் […]
Read Moreஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் […]
Read More