July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லேட்டாக வந்தாலும் சிறப்பாக உதவிய லேடி சூப்பர் ஸ்டார்
April 4, 2020

லேட்டாக வந்தாலும் சிறப்பாக உதவிய லேடி சூப்பர் ஸ்டார்

By 0 666 Views

ஊரடங்கு காரணமாக திரைத்துறை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, முதலில் உதவி செய்யும்படி திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரினார். அதன்பிறகு நடிகர் சங்கம் கோரியது.

முதல் உதவியாக ரூ. 10 லட்சத்தை பெப்ஸிக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பம் வழங்கியது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல கலைஞர்களும் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள்.

இதில் லேட்டஸ்டாக நயன்தாரா இணைந்திருக்கிறார். பெப்ஸிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை தந்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அவர்.

இந்த நிலையிலும் அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

சினிமாத்துறை மட்டுமல்லாது பிரதமர், மாநில முதல்வர்கள் திரட்டும் நிதிக்கும் இந்தி, தெலுங்கு நடிகர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்க தமிழ் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன் தவிர மற்றவர்கள் இன்னும் மௌனம் கலையாமல் இருக்கின்றனர்.