July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிம்புவுக்கு பெண் பார்க்கிறோம் வதந்திகளை நம்பாதீங்க – மிஸஸ் & மிஸ்டர் டி ஆர்
June 7, 2020

சிம்புவுக்கு பெண் பார்க்கிறோம் வதந்திகளை நம்பாதீங்க – மிஸஸ் & மிஸ்டர் டி ஆர்

By 0 731 Views

உஷா ராஜேந்தர் மற்றும் டி ராஜேந்தர் இருவரும் தங்கள் மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்து ஒரு அறிக்கையை மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அதன் பிரதி கீழே….

அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம்.

அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
டி.ராஜேந்தர் M.A
உஷா ராஜேந்தர்