நம்ம நாடெங்கும் கொரோனா என்னும் வைரஸ் எக்கச்சக்கமா பரவிவருவதால் மக்கள் அனைவரையும் இம்மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கினை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி சொல்லியிருக்கும் நிலையில் கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது சில வேண்டுகொள்கள் வைக்கிறார்.
அப்படி நாளை ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் கையில் மெழுகு வத்தியையோ ஒளிரும் பொருள்களையோ வைத்துக்கொண்டு ஒவ்வொரு இந்தியனும் தங்களது பால்கனியில் வந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டார்.
இப்படி ஒரு காட்சி ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சியாக இடம்பெற்றிருக்கும்.
இந்தச் செய்தியை பிரதமர் அறிவிப்பிற்குப்பின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பகிர ஆரம்பித்துவிட்டனர். இதனைப்பற்றி ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா அவருடைய கருத்தினை வெளியிட்டுள்ளார்.
“ஆம். இந்திய மக்கள் தற்போது ஒரு பெரும் ஆபத்தினை எதிர்க்கொண்டு நிற்கிறார்கள். இந்த நிலையைக் கடக்க ஒற்றுமைதான் மிகச்சிறந்த வழி. அதற்கு பாசிடிவ் எண்ணங்கள் தேவை. அதனை நாம் முழு மூச்சுடன் மேற்கொண்டு இந்த செயலில் ஈடுபடுவோம்…” என்று அடக்கமாக சொல்லி இருக்கிறார்.
கமல் ஒரு தீர்க்கதரிசி என்பார்கள். இப்போது அந்த லிஸ்டில் மோகன்ராஜாவும் வந்து விட்டார்.