April 18, 2024
  • April 18, 2024
Breaking News
April 5, 2020

திருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…

By 0 468 Views

யோகி பாபுவுக்கு இன்றைக்கு கல்யாண ரிசப்ஷன். நடக்குமா .? என்றால் “இன்னிக்கு நடக்க இருந்த என் மேரேஜ் ரிசப்சனை தள்ளி வைச்சிட்டேன். இப்போதைக்கு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அம்மா, தங்கச்சி, மச்சான், தம்பி என அனைவருடனும் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேச நாட்கள் கிடைத்துள்ளன.

ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, இப்போது குடும்பத்துடன் இருப்பது சந்தோஷமாக இருக்குது. சிவாஜி சார் நடித்த ‘கர்ணன்’ பார்த்தேன், முந்தா நேற்று விசு சாருடைய ‘சம்சாரம் அது மின்சாரம்’ பார்த்தேன். அதேபோல் குடும்பத்துடன் சேர்ந்து கீர்த்தி மேடம் நடித்த ‘நடிகையர் திலகம்’ பார்த்தோம்”… என்றார்.

அதெல்லாம் சரி.. , கரோனா வைரஸ் அச்சத்தால் ஏற்பட்டுள்ள முடக்கம் பலரையும் பாதித்துள்ளது. அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யும் ஐடியா உண்டா? என்ற கேள்விக்கு, “இந்த வைரஸ் தாக்குதலால் கஷ்டப்படுபவர்கள் மேலும் கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சினிமாவில் இருக்கும் தொழிலாளர்கள் மட்டுமில்லாம நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனா நமக்கோ வேலை செய்துவிட்டு, வீட்டிற்குள் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால், அவர்களுக்கோ அன்றைக்கு உழைத்தால் அன்றைக்குச் சாப்பாடு என்ற நிலை. கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து அவர்கள் மாதிரியான ஆட்களுக்கு உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்த உதவியைச் செய்து கொண்டிருக்கிறேன். வீட்டிற்குள் அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தாலும், வெளியே உயிருக்கு ஆபத்தான விஷயம் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் யோகி பாபு.

ஹும்ம்.. இதைத்தான் முதலிலேயே அறிவுறுத்தி இருந்தோம்..!