March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யோகிபாபு வளர்ச்சியும், மேக்னா நாயுடு வீழ்ச்சியும்
December 11, 2018

யோகிபாபு வளர்ச்சியும், மேக்னா நாயுடு வீழ்ச்சியும்

By 0 1139 Views

ஹீரோக்கள் எல்லோருமே ஒரு படத்தில் காக்கிச்சட்டை போட்டு போலீஸ் ஆகிவிடுவதைப் போல் காமெடியன்களுக்கான எவர்கிரீன் கேரக்டர் ‘எமன்’. இது யோகிபாபுவின் சீசன் என்பதால் அவரும் ‘தர்மபிரபு’ படத்தில் எமனாகிறார்.

சொல்லப்போனால் எமன்களாகிறார். அப்பா எமன், மகன் எமன் என்று இரு எமன்களாக அவர் நடிக்கும் இப்படம் எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாம். தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது.

சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளதாம்.

இந்தத் தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்துக் கொண்டிருக்க, வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்க இவர்களுடன் அழகம் பெருமாள், ‘போஸ்’ வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி. யுகபாரதியின் பாடல்களுக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். பி. ரங்கநாதன், தயாரிக்கும் படத்தின் இயக்கம் முத்துகுமரன்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு யோகிபாபுவுடன் மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகின்றன.

ஹும்… யோகிபாபுவின் சமஸ்தானத்தில் மேக்னா நாயுடு ஆட்டம் என்றால் இருவரின் நேரத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வாழ்க்கை புரிந்துவிடும்..!