May 25, 2019
  • May 25, 2019
Breaking News

Tag Archives

ஆச்சரியமாக உடல் இளைத்த யோகிபாபு

by on April 12, 2019 0

படத்துக்குப் படம் உடல் பெருத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்த யோகிபாபுவிடம் உடலை இளைக்கச்சொல்லி அவரது நெருங்கிய வட்டம் கேட்டுக்கொள்ள, ஆச்சரியமாக உடலை இளைத்துவிட்டார் யோகிபாபு. ( படத்தில் பார்க்க…) மற்றபடி இந்தப் புகைப்படம் இடம் பெற்ற படத்தின் செய்தி கீழே… பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த […]

Read More

யோகிபாபு யாஷிகாவுடன் நடிக்கும் ஜாம்பி முடிவடைந்தது

by on April 5, 2019 0

 பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் ‘ஜாம்பி’.   இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப்  பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.   இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ஜான் விஜய், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.   ஒரு  பாடல் தவிர […]

Read More

காற்றுள்ளபோதே வீட்டைக் கட்டிய யோகிபாபு

by on January 30, 2019 0

சென்னையில் குடியேறிய அனைவருக்குமே இங்கு ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டுமென்ற கனவு இருக்கும். அதில் சினிமாக் காரர்களின் கனவு கொஞ்சம் பிரமாண்டமாகவே இருக்கும். வடிவேலுவும், சந்தானமும் விட்ட கேப்பில் ‘மள மள’வென்று முன்னேறியவர்கள் சூரியும், யோகிபாபுவும். இதில் சூரி சொந்த வீட்டைக் கட்டிவிட்டார். அவரைவிட கொஞ்சம் பின்னால் வந்தாலும் யோகிபாபுவின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் முன்னேறியவர் வளர்ச்சிக்குத் தக்கவாறு சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நேற்று அவர் […]

Read More

யோகிபாபு வளர்ச்சியும், மேக்னா நாயுடு வீழ்ச்சியும்

by on December 11, 2018 0

ஹீரோக்கள் எல்லோருமே ஒரு படத்தில் காக்கிச்சட்டை போட்டு போலீஸ் ஆகிவிடுவதைப் போல் காமெடியன்களுக்கான எவர்கிரீன் கேரக்டர் ‘எமன்’. இது யோகிபாபுவின் சீசன் என்பதால் அவரும் ‘தர்மபிரபு’ படத்தில் எமனாகிறார். சொல்லப்போனால் எமன்களாகிறார். அப்பா எமன், மகன் எமன் என்று இரு எமன்களாக அவர் நடிக்கும் இப்படம் எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாம். தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான […]

Read More

சிம்புவைத் தொடர்ந்து காற்றின் மொழி யில் ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு

by on October 26, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது. அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதாம். அப்படி என்ன காட்சி..? படத்தில் வானொலி அறிவிப்பாளராக (RJ) நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் […]

Read More