September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லைகா தயாரிக்க சற்குணம் இயக்க அதர்வா முரளி நடிக்கும் படம் தொடங்கியது
August 4, 2021

லைகா தயாரிக்க சற்குணம் இயக்க அதர்வா முரளி நடிக்கும் படம் தொடங்கியது

By 0 605 Views

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “Production No.22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது.

தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது.

இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது.

ஜிப்ரான் இசைக்க லோகநாதன் (உஸ்தாத் ஹோட்டல் & பரோல் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார்.