August 30, 2025
  • August 30, 2025
Breaking News
April 11, 2019

சீண்டிய தொண்டரை பளார் விட்ட குஷ்பு வீடியோ

By 0 1309 Views
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
 
பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ‘ரிஷ்வான் அசாத்’துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்…” என்று பேசுகையில் குஷ்பூவின் பின்னால் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், குஷ்பூவின் முதுகுப் பகுதியில் சீண்டியதாகத் தெரிகிறது.
 
குஷ்பூ சற்று நேரம் அமைதியாக இருந்தும் அவர் கையை எடுக்காததால் அந்த தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார். அதனால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது. அந்த வீடியோ கீழே…