தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 -ம் ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நடக மன்றம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
கலை பண்பாட்டு இயக்ககத்தின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்பரியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் மற்றும் தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்யும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மேற்கொண்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் “கலைச் சங்கமம்” கலை விழாவாக சிறப்பாக கொண்டாட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஒரே நாளில் (18.01.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கலைச் சங்கமம் கலை விழா அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிv அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துக்கொள்ளும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த சிறப்பிற்குரிய, பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டங்களை கிராமியக் கலைஞர்கள் பங்குபெற்று நிகழ்ச்சிகளை வழங்குவார்கள்.
மேலும், சென்னையில் வருகிற 22.01.2026 மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவையில் இயல் சங்கமமும், 25.01.2026 மற்றும் 26.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் இசை மற்றும் நாட்டியச் சங்கமமும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கலைச் சங்கமம்”கலை விழாக்களின் வாயிலாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெறுவார்கள். மன்றத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு திங்கள் தோறும் நிதியது ரூ.3000/- தொகையாக உயர்த்தப்பட்டு அதற்கான உத்தரவு மாண் முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் 2021 ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி டு (2025-26) அகவை முதிர்ந்த, நலிவுற்ற நிலையில் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் வாழும் கலை செய்திருந்த 2,500 கலைஞர்களுக்கும் ஒரே நேரத்தில் மாதாந்திர நிதியுதவி வழங்குவதற்கு ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 0509.2025 அன்று கலைஞர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதி நல்கையை ரூ.3.00 கோடியிலிருந்து ரூ 4.00 கோடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் 2025-2026ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் உயர்த்தி வழங்கப்பட்டது.
2022-2023ஆம் ஆண்டு முதல் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்கிட ஆண்டுதோறும் 500 கலைஞர்களுக்கு ரூ.10,000/- வீதம் வழங்கிட ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கலைமாமணி விருது பெற்ற நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு பொற்கிழி ரூ.50,000/-லிருந்து ரூ.1,00,000/-ஆக 2021-2022 ஆம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு “இசைச் சங்கமம்” மற்றும் “கலைச் சங்கமம் ” கலை நிகழ்ச்சிகள் 38 மாவட்டங்களிலும் நடத்துவதற்கு ரூ.2.00 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக (2024 மற்றும் 2025) நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக 10,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெற்று பயன்பெற்றுள்ளார்கள்.
கலைத்துறையில் பல்வேறு கலைப்பிரிவுகளின் மேம்பட்ட வளர்ச்சிக்குச் சேவை செய்த புகழ்மிக்க கலைஞர்களுக்கு “கலைமாமணி” விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி 2024-2025 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, அதற்கென ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
“பாரதியார்”, “எம்.எஸ்.சுப்புலட்சுமி”, “பாலசரசுவதி” ஆகியோர் பெயரில் அகில இந்திய அளவிளான சிறப்பு விருதுகள் 2010ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கி வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் சிறப்பு விருது பெறும் கலைஞர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகையுடன் மூன்று சவரன் (24 கிராம்) பொற்பதக்கம் வழங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு இந்த முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கலை வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த கலை நிறுவனங்களுக்கு சிறப்பு கேடயம் வழங்குதல் மற்றும் சிறந்த நாடகக் குழுக்களுக்குச் சுழற்கேடயம் மற்றும் சிறப்பு கேடயம் வழங்கும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் கேடயம் பெறும் கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவிற்கு ரூ.1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) பரிசுத் தொகை வழங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு இந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களிடையே கலைக் குழுக்கள் பரிமாற்றம் திட்டத்தின்கீழ், கலை குழுக்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் பரிமாற்றம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்குக் குடும்பப் பராமரிப்பு நிதியுதவி தற்பொழுது ரூ.25,000/- தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு கலை நிறுவனங்களின் மூலம் கலை நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பளித்து அதன் மூலம் திறமைமிக்க 16 வயது முதல் 30 வயது வரையிலான இளம்கலைஞர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்தல், மேலும் இத்திட்டத்தில் கடந்த ஆண்டுகளிலிருந்து 18 வயது முதல் 32 வயது வரையிலான கிராமியக் கலைஞர்களும் பயன்பெற்று வருகின்றனர். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டினைச் சித்தரித்துத் தயாரிக்கும் சிறந்த தமிழ் நாடகங்கள், நாட்டிய-நாடகங்கள் உருவாக்கும் தொழில்முறை நாடக / நாட்டிய-நாடகக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீ நிதியுதவியாக ரூபாய் 1.50 இலட்சம் வழங்கப்பட்டு வந்ததை, மாண்புமி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த ஆண்டு ரூபாய் 2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட வழங்கப்படவுள்ளது. முத உத்தரவிடப்பட்
தமிழில் அரும்பெரும் கலை நூல்களை வெளியிட நூலாசிரியாகளுக்கு தலா ரூ. 2,00,000/- நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கலை மேதைகளின் நினைவு விழாக்களை நடத்தும் தன்னார்வக் கலை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்குதல்.
இயல், இசை, நாடக, நாட்டியம் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறும் நோக்கில் கலைவிழாக்கள் நடத்துதல்.
அயல் நாடுகளில் தமிழகக் கலைகளைக் கொண்டு செல்லுதல்.
இளைய மறைந்து வரும் தொன்மைச் சிறப்புமிக்க கலைகளை தலைமுறையினரும் கண்டு உணரும் வண்ணம் அவற்றை ஆவணமாக்குதல் போன்ற திட்டங்களை செவ்வன செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா, பழங்குடியின் கலை விழா மற்றும் கலைத் திருவிழாக்கள் நடத்துதல் போன்ற சீர்மிகு கலைப்பணிகளை மன்றம் செயற்படுத்தியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஓன்றிய அளவில் மட்டுமல்ல உலக அளவில் தலை சிறந்த கலை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
இச்செய்திகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத் தலைவர் திரு. வாகை சந்திரசேகர் அவர்களும், உறுப்பினர் – செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் அவர்களும் தெரிவித்தார்கள்.