January 24, 2026
  • January 24, 2026
Breaking News
January 21, 2019

திரை உலகிலும் ஒரு முன்னேற்றக் கழகம்

By 0 881 Views

‘காதல் முன்னேற்ற கழகம்’ என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தை ‘ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்’ மலர்க்கொடி முருகன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் பி.சி.சிவன்

பாடல்களை யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியத்துடன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனமும் இவரே.

இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

KMK Audio Launch

KMK Audio Launch

படம் பற்றி மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதா நாயகன் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் வைத்து வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம்தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத்தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலைப் பதிவிட்டிருக்கிறோம். படத்தைப் பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் “15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது…” என்றார்.

படப்பிடிப்பு  சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது..!” என்றார்.

பிரித்விராஜனுக்கு இந்தப் படமாவது பிரேக் தரட்டும்..!