October 30, 2024
  • October 30, 2024
Breaking News
July 8, 2023

கண் அறுவைசிகிச்சை மீது இந்தியாவின் முதன்மை மாநாடு

By 0 345 Views

நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் தொடங்கி வைத்தார்

இரு நாட்கள் நிகழ்வான இந்த வருடாந்திர மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 4000 பங்கேற்பாளர்கள் பங்கேற்று பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான சேவையாற்றி வரும் கண் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சென்னை: ஜூலை 8, 2023: நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள், IIRSI 2023 என்ற பெயரில் நடைபெறும் உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சையின் மீதான 38-வது மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். நிகழாமல் தடுக்கக்கூடிய பார்வைத்திறனிழப்பு, உள்விழி லென்ஸ் (IOL) பொருத்துதல் மற்றும் ஒளிவிலகள் அறுவைசிகிச்சை ஆகியவற்றை கூர்நோக்கமாக கொண்டு இந்தியாவின் முன்னணி தளமாக இம்மாநாடு நடத்தப்படுகிறது. சென்னை மாநகரின் ஐடிசி கிராண்டு சோழா ஹோட்டலில் இந்த இருநாள் நிகழ்வு நடைபெறுகிறது.

உள்விழி லென்ஸ் (IOL) பொருத்துதல் மற்றும் ஒளிவிலகள் அறுவைசிகிச்சையில் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும், இது தொடர்பான தொழில்நுட்பத்தில் எட்டப்பட்டிருக்கும் மேம்பாடு பற்றி விவாதிக்கவும் மற்றும் நிகழாமல் தடுக்கக்கூடிய பார்வை திறனிழப்பு பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பில் பங்களிப்பை வழங்கவும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கலந்தாலோசித்து செயல்படும் குறிக்கோளுடன் அவர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைப்பதே IIRSI 2023 மாநாட்டின் நோக்கமாகும்.

இம்மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து 4000-க்கும் அதிகமான கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். கண் மருத்துவவியல் துறையில் குறிப்பாக, கண்புரை மற்றும் ஒளிவிலகலுக்கான அறுவைசிகிச்சையில் அவர்களது திறன்களை வெளிப்படுத்தவும் மற்றும் இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுகளையும், விளக்கங்களையும் சமர்ப்பிக்கவும் ஏதுவாக இந்த வருடாந்திர மாநாடு உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக்கான இந்திய சங்கத்தால் (IIRSI) நடத்தப்படுகிறது.

நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் இந்நிகழ்வில் பங்கேற்ற கண் மருத்துவ நிபுணர்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: “38வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்று அதனை தொடங்கி வைப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியா முழுவதிலுமிருந்தும் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் கண் மருத்துவ நிபுணர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்பதை நான் அறிகிறேன். இந்திய கண் அறுவைசிகிச்சை நிபுணர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் IIRSI போன்ற மாநாடுகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. நமது நாட்டில், பார்வைத் திறனிழப்பு பிரச்சனையால் அவதியுறும் நபர்களின் எண்ணிக்கை 12 மில்லியனாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கான பங்களிப்பை நம்மால் வழங்க முடியும். சமூக அக்கறையோடு, தங்களது கண்களை தானமாக வழங்க உறுதிமொழி ஏற்பது மற்றும் இறந்த பிறகு தங்களது விழிகளை தானமாக வழங்க முன்வருவதன் வழியாக இந்த எண்ணிக்கையை நம்மால் குறைக்க முடியும்.”

வெளிநாட்டு கல்வி நிபுணர்களின் சிறப்புரைகள், இளம் கண் மருத்துவர்களுக்கான பயிற்சி அமர்வுகள், நேரடி செயல்பாட்டுடன் வெட்லேப் கல்வி திட்டங்கள், ஆப்தால்மிக் ப்ரீமியர் லீக் போட்டி கண் மருத்துவவியலில் நீதிமன்ற அமர்வு, நிறுவனங்களது ஸ்பான்சர்ஷிப்புடன் நடத்தப்படும் கருத்தரங்குகள், IIRSI -ன் திரைப்பட திருவிழா விருது நிகழ்ச்சி (IFFA) மற்றும் IRSI நிழற்பட போட்டி ஆகியவை இந்த இருநாள் மாநாட்டு நிகழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளாகும்.

IIRSI – ன் தலைமைச் செயலரும், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பேசுகையில், தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால், இந்நிகழ்வில் “உலகளவில் கண் மருத்துவவியலில் நிகழ்ந்திருக்கும் புத்தாக்கங்களை மையமாகக் கொண்ட IIRSI ன் இந்த வருடாந்திர மாநாடு, இந்தியாவின் கண் மருத்துவவியல் துறையின் காலண்டரில் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. இந்த ஆண்டு நிகழ்வில் பிரபல கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று இத்துறையில் நிகழ்ந்திருக்கும் சமீபத்திய முன்னேற்றங்களை பிறர் அறியுமாறு காட்சிப்படுத்தி விளக்கமளிக்கின்றனர்.

கண்புரை நோயின் சிக்கலான சூழ்நிலைகள் மற்றும் அறுவைசிகிச்சையை திறனுடன் பல்வேறு கையாள்வதற்கான அதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வதற்கு வளர்ந்து வரும் கண் அறுவைசிகிச்சை நோயறிதல் மருத்துவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை இம்மாநாடு வழங்கும். செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை ஆகிய அம்சங்களில் இந்தியாவில் கண் மருத்துவத்துறையின் திறன்களையும் மற்றும் செயல்உத்திகளையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதில் IIRSI மிக முக்கிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது” என்று கூறினார்.

விருது பெறும் சாதனையாளர்களின் பட்டியல்…

பிரசிடென்ட் தங்க பதக்கம் டாக்டர். ராகினி பரேக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த டாக்டர். ஆர். வெங்கடேஷ் சிறப்பு விருதை பெற்றார். டாக்டர். ஆர்த்தி நாங்கியா, டாக்டர். அரவிந்த் குமார் மோர்யா, டாக்டர். ஜெனின் படேல், டாக்டர். கமல் கபூர், டாக்டர். ரேஷ்மா ஜாவெரி மற்றும் டாக்டர். ஷகீன் சிங் ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்த விருதுகள் பெற்ற பிற சாதனையாளர்களாவார்.

யுகே-ன் டாக்டர். டாலியா செய்த், டாக்டர். ஹர்மிந்தர் துவா, யுஎஸ்ஏ – ன் டாக்டர். ஜெனிஃபர் ரோஸ் – நஸ்பாமெர், டாக்டர். யூரி சோய்பர்மேன், வியட்நாமின் டாக்டர். தின் தி ஹங் ஆன்ஹ், சுவிட்சர்லாந்தின் டாக்டர். ஃபர்பாத் ஹஃபேசி, கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜோஷ்வா C. டெய்ச்மேன், பிரேசில் – ன் டாக்டர். லியனார்டோ டொர்கெட்டி, இஸ்ரேலைச் சேர்ந்த டாக்டர். மைக்கேல் மிமோனி, பிலிப்பைன்ஸ் சேர்ந்த டாக்டர். ராபர்ட் ஆங், அர்ஜென்டினாவின் டாக்டர். ரோஜர் ஜால்டிவர், துபாய் – ன் டாக்டர். தமெர் கமாலி, ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். யூரி கல்லினிகோவ் ஆகியோர் சர்வதேச அளவில் விருதுகளை பெற்ற சாதனையாளர்கள்.

IIRSI – ன் அறிவியல் கமிட்டியின் தலைவர் டாக்டர். மஹிபால் எஸ். சச்தேவ், IIRSI -ன் தலைவர் டாக்டர். ராகினி பரேக், IIRSI – ன் தலைமை செயலரும், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால் ஆகியோர் இந்த தொடக்கவிழா அமர்வில் கலந்துகொண்ட சில முக்கிய பிரமுகர்களாவர்.

ஊடக தொடர்பிற்கு: மகேஷ் குமார் @ 98845 45000 / வெள்ளைச்சாமி @ 98845 52209