September 20, 2024
  • September 20, 2024
Breaking News
July 10, 2023

21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினம் – 10,000+ ஆர்வலர்கள் சவாரிகளுடன் சங்கமித்தனர்

By 0 360 Views

21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினத்தில் 10,000+ ஆர்வலர்கள் சக்தியூட்டப்பட்ட சவாரிகளுடன் பழம்பெரும் மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றனர்

• பெங்களூரு, சென்னை, டெல்லி, கொச்சின், புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பெரிய கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு, நாடு முழுவதும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது.

• பங்கேற்பாளர்கள், வரலாற்று சிறப்புமிக்க மோட்டார் சைக்கிள் கண்காட்சிகள், குழு சவாரிகள், தொழில்நுட்ப பணிமனைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஊடாடும் அமர்வுகள் போன்ற ஒரு பல்வேறு வகையான அற்புதமான நிகழ்வுகளை அனுபவித்தனர்.

• தங்களுடைய இதயங்கவர்ந்த மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்தவும், இந்த புகழ்பெற்ற பைக்குகளில் தங்களின் மறக்கமுடியாத சாகசங்களைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனைத்து வயது ரைடர்களும் ஒன்றுகூடினர்.

சென்னை, ஜூலை 10, 2023: சர்வதேச ஜாவா யெஸ்டி தினத்தின் 21வது பதிப்பைக் கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற பைக் பிரியர்கள் ஒன்று கூடினர். இந்த சிறப்பு நிகழ்வானது பல தசாப்தங்களாக ரைடர்களின் இதயங்களைக் கவர்ந்த பழம்பெரும் வாகனங்களான ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார் சைக்கிள்களின் நீடித்த பாரம்பரியத்தை கௌரவித்தது. இந்த வெற்றிகரமான நிகழ்வானது, பெங்களூரு, டெல்லி என்சிஆர், கொச்சின், புனே, சென்னை மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதைக் கண்டது.

சர்வதேச ஜாவா யெஸ்டி தினம், ஆர்வமுள்ள ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு உத்வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் கிளப்புகள் மற்றும் சமூகங்களின் ஆதரவுடன், இந்த பழம்பெரும் மோட்டார் சைக்கிள்கள் மீது தனிநபர்கள் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக செயல்பட்டது. இந்த பங்கேற்பாளர்கள் அந்தந்த பிராந்தியங்களில் கூடி, சந்திப்புகள், குழு சவாரிகள், கண்காட்சிகள் மற்றும் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தை கெரவிப்பதற்காக பல்வேறு செயல்பாடுகளை ஏற்பாடு செய்தனர்.

இந்த ஆண்டின் சர்வதேச ஜாவா யெஸ்டி தினம், தங்கள் விலைமதிப்பற்ற மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்தவும் மற்றும் இந்த புகழ்பெற்ற பைக்குகளில் தங்களின் மறக்கமுடியாத அனுபவங்களைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனைத்து வயதினரும் ஒன்று கூடியதின் மூலம் ஒரு விதிவிலக்கான பங்கேற்பைக் கண்டது, தங்களின் நேசத்துக்குரிய மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்தவும், இந்த பிராண்டுகளை மோட்டார் சைக்கிள் சிறப்பின் ஒரு காலமற்ற அடையாளமாக மாற்றிய செழுமையான வரலாறு மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கிற, வரலாற்று சிறப்புமிக்க ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டன.

கணிசமான இந்த பங்கேற்பு குறித்து கருத்து தெரிவித்த ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆஷிஷ் சிங் ஜோஷி கூறியபொழுது, “இந்த சர்வதேச ஜாவா யெஸ்டி தினம், இந்திய ரைடிங் சமூகத்தில் இந்த மோட்டார்சைக்கிள்கள் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்திற்கு ஒரு சான்றாக இருக்கிறது.

பல்வேறு புவியியல் பகுதிகளில் இருந்து ஜாவா மற்றும் யெஸ்டி ஆர்வலர்களால் காட்டப்படும் இந்த அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தைக் காண்பது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. ஒன்றாக, காலமற்ற கைவினைத்திறனின் இந்த சாரத்தை நாங்கள் புதுப்பித்து இந்த புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தை நாங்கள் மதிக்கிறோம். இந்த நிகழ்வானது, புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள்களை கொண்டாடுவது மாத்திரமல்ல, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சாகசம், சுதந்திரம் மற்றும் சமூகத்தின் உணர்வையும் கொண்டாடுகிறது.” என்றார்.

நாள் முழுவதும், பங்கேற்பாளர்கள் கலகலப்பான விவாதங்களில் ஈடுபட்டு, தொழில்நுட்ப அறிவை மாற்றிக்கொண்டனர், மேலும் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் மீதான தங்கள் பகிரப்பட்ட ஆர்வத்தால் வளர்க்கப்பட்ட தோழமையைக் கொண்டாடினர். கலந்துகொண்டவர்கள், புதுப்பிக்கப்பட்ட கிளாசிக், அரிய மாடல்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பைக்குகளில், இந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளடக்கிய பல்துறை திறமை மற்றும் தனித்துவத்தை எடுத்துக்காட்டி, ஆச்சரியப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

இந்த கிளாசிக் மோட்டார் பைக்குகளின் உரிமையாளர்கள் இந்த நிகழ்வில் மிகவும் அரிதான மற்றும் விலையுயர்ந்த மாடல்களை பெருமையுடன் காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வில், இந்த நிறுவனம், அதன் சமூகம் அவர்களின் சவாரி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள மேலும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பல்வேறு பயணங்கள் மற்றும் அனுபவங்களுக்கான அணுகலைப் பெறுவதற்கு உதவும் தனது சமூகத்தை மையமாகக் கொண்ட பயன்பாடு தளத்தை வெளியிட்டது.

இந்த நிகழ்வில் அசல் CZ முதல் சமீபத்திய யெஸ்டி ரோடு கிங்ஸ் வரையிலான ஒரு பல்வேறு பழங்கால சேகரிப்பு மோட்டார் சைக்கிள்கள் பெங்களூர் பதிப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டன. தேசிய அளவில் சுமார் 400 க்கும் அதிகமான பழம்பெரும் ஜாவாக்கள் மற்றும் யெஸ்டிக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன. சர்வதேச ஜாவா யெஸ்டி தினத்தின் இந்த வெற்றி இந்த மோட்டார் சைக்கிள்களின் நீடித்த பிரபலத்தையும் ஜாவா மற்றும் யெஸ்டி சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் மேலும் நிரூபிக்கிறது.

ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தைக் கொண்டாட இன்னும் அதிகமான ரைடர்கள் மற்றும் ரசிகர்களை ஒன்றாக கொண்டுவரும் இந்த வருடாந்திர நிகழ்வின் எதிர்கால மறுநிகழ்வுகளை ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

*****

மேலும் விவரங்களுக்கு:

திஷா ஆனந்த்

disha.anand@adfactorspr.com

+91 97115 38605

இணையதளம்: www.jawamotorcycles.com / www.yezdi.com