September 24, 2023
  • September 24, 2023
Breaking News
July 15, 2023

சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவ மனை திறப்பு விழா

By 0 100 Views

சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும்.

இங்கு முக்கியமாக முதுகு வலி , கழுத்து வலி, மூட்டு வலி (முழங்கால், தோள் பட்டை, கணுக்கால்), விளையாட்டு காயங்கள்(?) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கப்படுகிறது.

இந்த மையத்தின் நிறுவனர்கள் டாக்டர் கார்த்திக் நடராஜன் மற்றும் டாக்டர் V வான்மதி ஆகிய இருவரும் அறுவை சிகிச்சை இல்லாத வலி நிவாரணத்தில் நிபுணர்கள். இவர்கள் முதுகுத் தண்டு பிரச்சனைகளுக்கும் டிஸ்க் ஹெர்னியேஷன், கழுத்து வலி, தோள் வலி, ஸியாடிகா, ஆர்த்ரைடிஸ் ஆகிய நோய்களுக்கும் இதர முதுகு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாத தீர்வுகள் தருகின்றனர்.

இவர்கள் இப்பொழுது சினாப்ஸ் ரெஜெனெரேட்டிவ் கிளினிக் என்னும் பிரிவை புதிதாக தொடங்கியுள்ளனர். இந்த புது முயற்சி பி ஆர் பி மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தை சார்ந்த சிகிச்சைகளை கையாளும்.

எலும்பியல் நிபுணரான டாக்டர் K P கோசிகன் அவர்களும் தோல் மருத்துவரான டாக்டர் ரவிசந்திரன் அவர்களும் இந்த பிரிவை கடந்த ஜூலை 9 ஆம் தேதி அன்று திறந்து வைத்தனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே தத்தம் துறைகளில் பி ஆர் பி சார்ந்த சிகிச்சை முறைகளை செய்து வருகின்றனர். எலும்பு, தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அலோபீசியா முடி வளர்ச்சி, பிஆர்பி ஃபேஷியல், சுருக்கங்கள், முகப்பரு ஆகியவற்றுக்கான பிஆர்பி சிகிச்சை, தோல் புத்துணர்ச்சி, ஆறாத காயங்கள், நீரிழிவு புண்கள், நீரிழிவு நரம்பியல் கோளாறுகள் ஆகியவற்றிற்கு பிஆர்பி சிகிச்சை முறைகளை கையாண்டு வருகின்றனர்.

ஸ்டெம் செல் சிகிச்சைகள் மூலம் முட்டி ஆர்த்ரரைடிஸ், தசைநார் கிழிவு, விளையாட்டு காயங்கள்(?) போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். சமீபத்திய நுட்பங்களான அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல் (Ultrasound Guidance ) மற்றும் ட்ரைசெல் மையவிலக்கு (TriCell Centrifuge) ஆகியவற்றை கொண்டு மிகவும் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சிகிச்சை வழிமுறைகளை செய்யலாம். மேலும் இந்த நவீன சிகிச்சைகள் அனைத்தும் இந்திய FDA வினால் அங்கீகாரம் பெற்றவை.

அறுவை சிகிச்சை இல்லாத வலி நிவாரணம் பெற தொலைபேசி எண் 7338882222 மூலமோ www.synapsepain.com வலைதளத்தின் மூலமோ எங்களை அணுகலாம்.