October 15, 2025
  • October 15, 2025
Breaking News
July 17, 2018

20ம் தேதி சர்ப்ரைஸ் தரப்போகும் கௌதம் மேனன்

By 0 1173 Views

பஞ்சாயத்துத் தேர்தல் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கு பதிலைப் போலத்தான் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எப்போது ரிலீசாகும் என்கிற கேள்விக்கு பதிலும்.

ஆனால் உற்சாகமாக இருக்கும் கௌதம் மேனன், நேற்று ‘எனை நோக்கி…’ படத்தின் கடைசி ஷெட்யூலை ஆரம்பித்திருக்கிறார். அதற்காக போட்ட ட்வீட்டில் “இந்த இறுதி ஷெட்யூலில் தனுஷுடன் சசிகுமாரும் நடிக்கிறார். திடீரென்று யோசிக்கும்போதுதான் நாங்கள் மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கிறோம்..!” என்று மெசேஜ் போட்டிருக்கிறார்.

‘மூன்று நடிகர்கள்…’ என்றும் சொல்லலாம் என்பது ஒருபக்கம். இது மட்டுமல்லாமல் வரும் ஜூலை 20-ம்தேதி பட டைட்டிலின் டிசைனை அறிவிக்கப்போகிறாராம்.

அட… படத்தைக் காட்டுங்க சார்ன்னா… இப்பதான் டைட்டிலையே காட்டப்போறார்.

நாம இப்படி காத்திருக்கிறதால ‘காக்க காக்க 2’ன்னே வச்சிருக்கலாமோ..?