October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அஜித் நடித்த என்னை அறிந்தால் பாகம் 2 படமாக்க திட்டம் – கௌதம் மேனன்
May 30, 2020

அஜித் நடித்த என்னை அறிந்தால் பாகம் 2 படமாக்க திட்டம் – கௌதம் மேனன்

By 0 715 Views

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்படும் என்று அறிந்த நிலையில் அதன் குறும்படம் ஒன்றை லாக் டவுனில் வைத்து இயக்கி வெளியிட்டார் கௌதம் மேனன்.

 கார்த்திக் டயல் செய்த எண் என்று தலைப்பிடப்பட்ட அதில் சிம்புவும் த்ரிஷாவும் நடித்திருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி விட்டது.

அந்தப் படத்தை போன்றே அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் 2015-ல் வெளி யானது. இப் படத்தின் பார்ட் 2 வை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் கெளதம் மேனன் ஒரு ஆன் லைன் சாட்டில் சொல்லி இருக்கிறார்.

அதன் குறும்படத்தையும் கௌதம் மேனன் வெளியிடுவாரா என்று அஜீத் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.