தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கயின் மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2022-23 (Q3)
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும் வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது 511 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள், 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
23.01.2023 அன்று சென்னையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த ஒன்பது மாத கால நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
Bank’s Results at a glance
( in Crores)
2023- ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 5.69 % வளர்ச்சியடைந்து ரூ.78,242 கோடியை எட்டியுள்ளது.
வைப்புத்தொகை ரூ. 43,440 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களின் மொத்தத்தொகை ரூ 34,802 கோடி என்ற நிலையில் உள்ளது.
நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை (CASA) ரூ12,851 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.
கடன் வழங்கல் துறை
வங்கியானது விவசாயம், சிறு குறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
2022-23 மூன்றாம் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.23,235 கோடியில் இருந்து ரூ.25,636 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 10.33% ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 79.67% என்ற விகிதத்தில் உள்ளது.
விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.10,620 கோடியாக உள்ளது. விவசாயத் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மொத்த கடன்களில் 18% சதவிகிதம் மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 30.52% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.11,986 கோடியில் இருந்து ரூ.12,870 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 7.38% ஆக உள்ளது.
Y-O-Y செயல்திறன் (Q3FY23 viz-a-viz Q3FY22)
வைப்புத்தொகை ரூ.42,035 கோடியில் இருந்து ரூ.43,440 கோடியாக உயர்ந்துள்ளது.
CASA ரூ.11,667 கோடியில் இருந்து ரூ.12,851 கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.15% வளர்ச்சியை அடைந்துள்ளது.
கடன் தொகை ரூ.34,802 கோடியாக உயர்ந்துள்ளது. இது 8.77% வளர்ச்சியை எட்டியுள்ளது.
செயல்பாட்டு இலாபம் (Operating Profit) ரூ.404.81 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டில் ரூ.401.12 கோடியாக இருந்தது.)
நிகர இலாபம் ரூ.279.70 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டில் ரூ.202.88 கோடியாக இருந்தது.) இது 37.86% வளர்ச்சியடைந்துள்ளது.
நிகர வட்டி வருவாய் (NII) ரூ.534.27 கோடியாக உள்ளது (முந்தைய ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டில் ரூ.452.76 கோடி) 18 % வளர்ச்சியடைந்துள்ளது.
ROA 2% மற்றும் ROE 17.14 % (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முறையே 1.62% மற்றும் 16.38 %)
நிகரமதிப்பு (Networth) ரூ.6,583 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.4,966 கோடி) இது ரூ.1,617 கோடி உயர்ந்து 32.56 % வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்த வராக்கடன் மொத்த கடன்களின் தொகையில் 1.70% ஆகவும், நிகர வராக்கடன் 0.75% ஆக உள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.08% மற்றும் 1.44 %)
PCR (Provision Coverage Ratio) 89.83% ஆக உள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 83.71%)
புதிய முயற்சிகள்
v வங்கி இந்த காலாண்டில் இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது, மேலும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 25 புதிய கிளைகளைத் துவங்க திட்டமிட்டுள்ளோம்
v காப்பீடு திட்டங்களை வணிகப்படுத்த, மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சோழா எம் எஸ் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் கோடக் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
v வாடிக்கையாளர்களுக்கு பல புதிய டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு ஒப்பந்தக்களை நடப்பு நிதியாண்டில் எஞ்சியிருக்கும் காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்