October 21, 2026
  • October 21, 2026
Breaking News
July 27, 2020

திருநள்ளாறு இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம் பதிவு செய்ய…

By 0 1006 Views

”திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டி நடத்தப்பட்டு வந்த நவக்கிரக சாந்தி ஹோமம், கரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது.

தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இணையவழி பூஜை (இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம்) நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக www.thirunallarutemple.org என்ற தேவஸ்தான வலைப்பக்கத்தில், ஹோமம் பதிவு செய்யும் வசதி அதிகரிக்கப்பட்ட ஹோம காலங்களின் படி ( 3 காலங்களில் 6 நேரங்கள்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதில் பக்தர்கள் தாங்கள் விரும்பும் கால பூஜைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்த ஹோம பூஜைக்கான இணையவழி இணைப்புத் தொடர் (யூடியூப் சேனல் இணைப்பு) அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்படும்.

அதன் மூலம் அவர்கள் இ-நவக்கிரஹ சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு பயன்பெறலாம்.