July 1, 2025
  • July 1, 2025
Breaking News
January 9, 2020

ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

By 0 781 Views

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர்.

தமிழகத்தில் மேலும் இரண்டு முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மற்றொருவர் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு நாளை முதல் அவர்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆயினும், இதற்கு மாற்றாக, அதன் தகுதிக்கு இணையான தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.