January 23, 2026
  • January 23, 2026
Breaking News
August 4, 2019

கோமாளி டிரைலர் பார்த்து வருத்தப்பட்டாரா கமல்..?

By 0 1236 Views

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் ‘கோமாளி’ பட டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு நாளில் இரண்டு மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த டிரைலர் கமல் பார்வைக்குப் போனதாகவும், அதைப் பார்த்த கமல் அதில் ரஜினி குறித்து வரும் கிண்டலைக் குறிப்பிட்டு “அதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை. அதில் எனக்கு உடன்பாடில்லை…” என்று சொன்னதாகயும் செய்திகள் வெளியாகின.

அதுவும் கூட டிரைலருக்கான பப்ளிசிட்டியாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும், ரஜினி பற்றிய டிரைலர் காமெடி குறித்து ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். கீழே டிரைலர்… நீங்களும் பார்த்து உங்கள் கருத்தையும் பகிருங்கள்…