April 29, 2024
  • April 29, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

வித்தைக்காரன் திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2024 0

படத்தைக் காமெடியாக எடுக்கலாம், ஆனால் படம் எடுப்பதையே காமெடியாக ஆக்கிவிடக்கூடாது அல்லவா..? இதை உணர்த்துகிறது இந்த ‘டார்க் காமெடி’ப் படம். 

இந்தப்படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குனர் வெங்கி, லோகேஷ் கனகராஜிடம் சினிமா பயின்றவர் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன் காமெடி சதீஷ், ஹீரோவாகி இருக்கும் மூன்றாவது படம் இது.

சிறு வயது சதீஷ்(களில்) ஒருவர் “ஏமாற்றுவது தவறு” என்றும், “ஏமாற்றுவது தவறு அல்ல… ஏமாறுவதுதான் தவறு…” என்று இன்னொருவரும் கொள்கையுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

சரி… இந்த கான்செப்ட்…

Read More

பாம்பாட்டம் திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2024 0

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகள் எப்போதுமே வெகுஜன ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு அம்மன், சந்திரமுகி, காஞ்சனா வரிசை படங்கள், பாகுபலி என்று பல படங்களின் வெற்றியை சாட்சியாக சொல்ல முடியும்.

அந்த வரிசையில் இடம் பெறவென்று எண்ணி களமிறங்கி இருக்கிறது இந்தப் படம்.

ராஜா, ராணிகள் ஆண்டு கொண்டிருந்த இந்தியாவின் ஒரு பகுதி. அதில் மல்லிகா ஷெராவத் ஒரு பெரிய சமஸ்தானத்தைக் கட்டி ஆண்டு கொண்டிருக்கிறார் அப்போது அங்கு வரும் ஜோசியர் ஒரு பாம்பால் மல்லிகாவின் உயிருக்கு ஆபத்து…

Read More

ரணம் திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2024 0

நாயகன் வைபவின் 25 ஆவது படமாம் இது. எனவே, நகைச்சுவைப் படங்களிலேயே அதிகம் பார்த்த அவரை சீரியஸ் ஹீரோவாக இதில் நிறுவியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப்.

முகம் சிதைந்து போன சடலங்களை அடையாளம் காண்பது போலீசுக்கு பெரிய சவாலாக இருக்க, அதற்கான ஒரே தீர்வாக இருக்கிறார் வைபவ்.

அந்த முகங்களின் அனாட்டமியை வைத்து அந்த உருவத்தை அப்படியே வரைந்து கொடுக்கும் திறமை பெற்றவராக இருக்கும் அவர் தீர்க்க முடியாத பல கேஸ்களிலும் கூட அதன் குற்றப் பின்னணியை கரைம் ஸ்டோரியாக…

Read More

பைரி திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2024 0

வட்டார வழக்குடன் சரியாகச் சொல்லப்படுகின்ற அந்தந்த மண் சொல்லும் கதைகள் எப்போதுமே ரசிக்கப்படும். அந்த வகை முயற்சியாக வந்திருக்கிறது இந்த பைரி.

100 வருடங்களாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தை இன்றைய நாகர்கோயில் பகுதி வாழ்வியலுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி.

நாயகன் சையத் மஜீத்துக்கு அவரது மூதாதையர் போலவே புறா வளர்ப்பு மற்றும் பந்தயத்தில் ஆர்வமும், ஆசையும் இருக்க, அதனாலேயே சீரழிந்த குடும்பம் என்பதால் அவரது தாய் விஜி சேகர், மகன் அந்தப்பக்கம் போகாமல் பார்த்துக் கொள்கிறார்.

ஆனாலும்,…

Read More

பர்த்மார்க் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2024 0

சைக்கலாஜிக்கல் திரில்லர் எனப்படும் உளவியல் ரீதியான படங்களின் முயற்சி தமிழில் அரிதாகத்தான் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.

படத்தில் மொத்தம் ஆறு கேரக்டர்கள்தான். இதை வைத்து முழுப் படத்தையும் சொல்ல முடியும் என்று நினைத்த இயக்குனரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. அப்படியே படத்தை லாவகமாக நகர்த்தியும் இருக்கிறார்.

படத்தின் ஆகப்பெரிய விஷயம் நாயகன் ஷபீர் கல்லரக்கலும், நாயகி மிர்னாவும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து அதில் அமிழ்ந்து நடித்திருப்பதுதான். அந்த அளவுக்கு அவர்களிடம்…

Read More

நினைவெல்லாம் நீயடா திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2024 0

நியாயப்படி இந்தப்படத்துக்கு நினைவெல்லாம் நீயடி என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நாயகன் பிரஜன் கடந்து போன காதலியின் நினைவாகவே வருடக் கணக்கில் மணமாகாமல் வாழ்கிறார்.

அவர் காதலி வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பிரஜனின் முறைப் பெண் மனிஷா யாதவ் சதாசர்வ காலமும் பிரஜனிடம் நினைவெல்லாம் நீ மட்டும்தான்டா என்று அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் மனிஷா தற்கொலைக்கே போக,…

Read More

கிளாஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Feb 21, 2024 0

இது உடன் படிக்கும் classmates பற்றிய படம் அல்ல, உடன் குடிக்கும் glass mates பற்றிய படம்.

அப்படி… கதையின் நாயகனான அங்கயர்க் கண்ணன் தன் மாமாவுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறார். அதனால் தன் டிரைவர் வேலையையும் பார்க்க முடியாமல் போக… அன்பான மனைவி மீதும் சந்தேகப்பட நேர்கிறது.

அவர் குடியை விட்டாரா அல்லது அவரது குடி கெட்டதா என்பதை முன்பாதியைக் கலகலப்பாகவும் பின் பாதியை நெகிழ்ச்சியாகவும் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ‘குட்டிப்புலி’ சரவண…

Read More

மேடம் வெப் ஆங்கிலப்பட விமர்சனம்

by by Feb 17, 2024 0

Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது. இதில் நாயகி டகோட்டா ஜான்சன், கதை நாயகியாகிறார். இவர் படத்தில் ஏற்றி ருக்கும் கசான்றா வெப் கேரக்டரும் கூட மார்வெல் காமிக்சில் இடம் பெற்ற ஒரு பாத்திரம்தான்.

மற்றபடி கதை என்று பார்த்தால் ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகள் டகோட்டா ஜான்சனுக்குக் கிடைக்கிறது.

அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு திறனைப்…

Read More

எப்போதும் ராஜா திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2024 0

சினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’.

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் காக்கிச்சட்டை போட்ட கதைகள் தோற்றதில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தானும் ஒரு காக்கி சட்டைக்கு ஆர்டர் கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியிருக்கிறார் விண் ஸ்டார்.

அத்துடன் அவரது நடிப்பு ஆசை…

Read More

சைரன் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2024 0

நம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி.

இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ்.

நாயகன், “ஜெயம் ரவியா அது..?” என்று கேட்கும் விதத்தில் இதுவரை இல்லாத கெட்டப்பாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் வந்து…

Read More