October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விக்ரமில் நான் உயிருடன் இருப்பதால் கைதி 2 விலும் இருப்பேன் – அர்ஜுன் தாஸ்

by by May 4, 2024 0

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில்…

Read More

நான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறேன் – சோனியா அகர்வால்

by by May 4, 2024 0

சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது….

Read More

சபரி திரைப்பட விமர்சனம்

by by May 4, 2024 0

நம் சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்று எடுத்துக் கூறும் கதை. அத்துடன் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவும் இருக்க நேர்ந்தால் தனித்த ஒரு தாயாக எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ்.

கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் அதற்குப் பொருத்தமாக வரலட்சுமி சரத்குமாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரு பெண் குழந்தையின் தாயாக அவரும் அந்தப் பாத்திரத்தில் மிகப் பொருத்தமாக இருக்கிறார். 

கணவரைப் பிரிந்து மும்பையிலிருந்து…

Read More

ஶ்ரீகாந்த் பலரது அகக் கண்களைத் திறந்து வைக்கும் – ஜோதிகா

by by May 3, 2024 0

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இயக்குநர் துஷார் ஹிர நந்தானி…

Read More

ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து ஏற்படுத்திய ‘ மாற்றம் ‘

by by May 1, 2024 0

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !! 

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து…

Read More

கோவா திரைப்பட விழாவில் பரிசு பெற்றது குரங்கு பெடல் – காளி வெங்கட்

by by May 1, 2024 0

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது.

இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில்…

Read More

அக்கரன் திரைப்பட விமர்சனம்

by by May 1, 2024 0

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பார்கள். அதைப்போல நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுக்க முடியாதவர்கள் நல்ல கதையை நம்பிப் படம் எடுக்கலாம். 

அதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். எல்லாப் படங்களிலும் குணச்சித்திர மற்றும் துணைப் பாத்திரங்களில் வரக்கூடிய எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஷ்வந்த்தை வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை ரசிக்கும்படி எடுத்து விட முடியாதா என்று தொடைதட்டிக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.

அதற்கு அவர் நம்பியிருப்பது ஒரு ஆக்ஷன் த்ரில்லரை….

Read More

சாய் தன்ஷிகாவுக்காக கதை எழுதுவேன் – மிஷ்கின்

by by Apr 30, 2024 0

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read More

இசை எவ்வளவு பெரிதோ மொழி அவ்வளவு பெரிது – கவிபேரரசு வைரமுத்து

by by Apr 28, 2024 0

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார்.

ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் தற்கால…

Read More

பிரபாஸின் கல்கி 2898 AD பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by by Apr 28, 2024 0

*பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !*

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன்…

Read More