May 12, 2024
  • May 12, 2024
Breaking News

Currently browsing அரசியல்

மோடி பொய் சொல்லிக்கொண்டே போகிறார் – பிரகாஷ்ராஜ் தாக்கு

by by May 9, 2018 0

தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் –

“இந்திய சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நான் ஒரு குடிமகன்.

நான் எந்த கட்சியையும் சாரதவன். நான் ஒரு கலைஞன். கட்சியில் இருந்து வளர்ந்தவன் கிடையாது…

Read More

மோடியிடம் சித்தராமையா 100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

by by May 7, 2018 0

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார்.

பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:-

‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை…

Read More

ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா

by by May 6, 2018 0

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார்.

அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் ஓட்டு…

Read More

யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்

by by May 4, 2018 0

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திரசேகர் ராவைத் தொடர்ந்த சின்ஹாக்களின் சந்திப்பு…

Read More

உச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு

by by May 3, 2018 0

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று…

Read More

காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

by by May 1, 2018 0

காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படையினரை…

Read More

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்

by by Apr 30, 2018 0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதற்கு இன்னும் மூன்று நாட்களே…

Read More

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

by by Apr 28, 2018 0

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து…

“இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில்…

Read More

திமுக ஆட்சி அமைந்ததும் குட்கா குற்றவாளிகளை தண்டிப்போம் – ஸ்டாலின்

by by Apr 27, 2018 0

தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதிலிருந்து…

“கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா தொடர்பான போதைப்பொருட்களே காரணம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் தடைச்செய்யப்பட்ட…

Read More

கர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்

by by Apr 25, 2018 0

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி என்று அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைய உள்ளது.

முன்னதக இந்தத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு பாராளுமன்றம் அமையவே சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படி…

Read More