April 25, 2024
  • April 25, 2024
Breaking News
June 5, 2018

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்

By 0 1025 Views

“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்…

“கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது..!” என்றார்.

கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்…

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் அந்த ஆணையத்துக்கு மட்டுமே தண்ணீர் திறக்கும் முழு உரிமை இருக்க மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது. கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கமலஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் தண்ணீர் வராது..!”