
மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

சத்தீஷ்கர் பஞ்சாபில் மதுபானங்கள் வீட்டுக்கு டெலிவரி
சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
ஆனால் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்ததால் கொரோனா பரவலை தடுக்கும் சமுக இடைவெளி பின்பற்றப்படவில்லை.
இதனை அறிந்த சத்தீஸ்கர் அரசு ‘குடி’ மகன்களின் வசதிக்காக புதிய முறையை அமல்படுத்தியது. இதற்காக சத்தீஷ்கர் மாநில அரசு வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது.
இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து பதிவு செய்தால்…
Read More
Breaking News தமிழ்நாட்டில் மே 7 முதல் கட்டுப் பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு
நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது.
Read More

திருநள்ளாறு சனி பகவான் அபிஷேக ஆராதனைகள் யூ டியூபில்…
சனி பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
“கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், உலகம் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலிருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்காகவும், அனுகிரஹ மூர்த்தியான சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொறு சனிக்கிழமையிலும் காலை மற்றும்…
Read More
இன்றைய (22 ஏப்ரல் 2020) முக்கிய செய்திகள் ஒரு தொகுப்பு
மே மாதத்தின் மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று டைம்ஸ் நெட்வொர்க் பிரொட்டிவிட்டி அமைப்புடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது – ஐசிஎம்ஆர் விளக்கம்.
மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை – மத்திய அரசு அதிரடி.
கர்நாடகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிப்பு : அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதி.
கொரோனா…
Read More
நீட்டிக்கப் படும் ஊரடங்கில் மேற்கொள்ளப் படும் மாற்றங்கள்
இந்த மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஏற்ப சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என பிரித்து ஊரடங்கை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட ஊரடங்கில் பொருளாதார சுழற்சி பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது.
புதிய திட்டத்தின்படி நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். சில விதிவிலக்குகளுடன்…
Read More
ஜூம் கால் மூலம் நிர்வாகிகள் ரசிகர்களிடம் பேசிய கமல்
இரண்டு நாள் முன்பு மக்களின் குரலை வெளிப்படுத்தும் விதமாக மோடிக்கு சில பல கேள்விகளும், கோபங்களும் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் ஜூம் காலில் பேசி வருகிறார்.
அந்த வகையில் இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல்.
போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ காலில்,…
Read More
வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு..?
தற்போது சமூக வலைதளங்களை குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் உலாவரும் புதிய வதந்தி. . .
~சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, Mandate for All : Tonight 12(midnight) onwards Disaster Management Act~ எனத் தொடங்கும் வதந்தியில் ~Coronavirus பற்றிய செய்திகள், Updates, மத்திய, மாநில அரசுகள் சம்பந்தபட்ட செய்திகள் Memes, PM, CM சம்பந்தப்பட்ட memes, செய்திகள் தடை செய்யப்பட்டுள்ளது~ என்றும் பரப்பப்படுகிறது. மேலும், அவ்வதந்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, ~குழு…
Read More