March 24, 2023
  • March 24, 2023
Breaking News
July 12, 2020

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

By 0 387 Views
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வருகிற 16-ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.