January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா – சித்தார்த்தை எச்சரித்த கார்த்தி

by by Nov 23, 2024 0

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், 

சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், 

சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார்.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி…

Read More

லைன்மேன் திரைப்பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது. 

ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான்.

தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார் சார்லி. ஆனால் இவர் படத்தின் கதா நாயகனல்ல.

பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜிதான் படத்தின் ஹீரோ. அவர்…

Read More

பராரி திரைப்பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

சாதிய வன்கொடுமைகளைச் சொல்லிப் பல படங்கள் வந்திருந்தாலும், இன, மொழி பாகுபாட்டின் அடிப்படையில் பாதிப்பு நிலைகள் சொந்த மாநிலத்தில் எப்படி உள்ளது, அதே பிரச்சினைகளை வெளி மாநிலத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டியுள்ளது, அதையும் தாண்டி இந்திய அளவில் அதன் நிலை என்ன என்பதை அலசி வெளிவந்திருக்கும் முதல் படம் இது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். சாதிதான் வேறே தவிர இருவருக்கும் மூலத்தொழில், கூலித் தொழில்தான்.

உள்ளூரில்…

Read More

பணி பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதே இந்தப் படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திக்கிறது. நடித்தோமா சம்பாதித்தோமா என்றில்லாமல் இவருக்குள் இருக்கும் கலை ஆர்வம் இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். 

கதை இதுதான்…

திருச்சூர் பகுதியில் ஜோஜு ஜார்ஜும் அவரது நண்பர்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அத்துடன் கட்டப்பஞ்சாயத்தும் அவர்களை முக்கியஸ்தர்களாக ஆக்கி இருக்கிறது. 

ஏரியாவில் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் இவர்களது அத்து மீறிய காரியங்களால் நிறைய வழக்குகளும் இவர்கள் மீது உள்ளன….

Read More

இந்த பூமி யாருக்கும் சொந்தமில்லை – பராரி பிரஸ் மீட் சுவாரஸ்யம்

by by Nov 21, 2024 0

’பராரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”.

தயாரிப்பாளர், நடிகர் ஹரி, “‘பராரி’ படம் எங்களுடைய சின்ன முயற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்”.

நடிகை சங்கீதா, “இதுதான் என்னுடைய முதல் படம்….

Read More

போட்டுக் கொடுத்ததால் பாடலாசிரியர் பெயரை போடாத சக்தி சிதம்பரம் – ஜாலியோ ஜிம்கானா பட விவகாரம்

by by Nov 20, 2024 0

ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, “நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய…

Read More

மொக்கைக் கதையில் கமலை நடிக்க வைத்தேன் – ஆர்.வி. உதயகுமார் வாக்குமூலம்

by by Nov 20, 2024 0

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை…

Read More

நயன்தாரா : பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப் பட விமர்சனம்

by by Nov 19, 2024 0

நயன்தாரா சினிமாவில் நடிகையாக அறிமுகமானது, தமிழ் சினிமாவில் நுழைந்து சில தடைகளுக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, அவரது காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – தேவதைக் கதைக்கு அப்பால்) என்ற ஆவணப்படம்.

நயன்தாராவின் ஆவணப்படம் என்ற உடன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவரது காதல் கதைகளை தான், ஆனால் இதில் அவர் தான் கடந்து…

Read More

நிறங்கள் மூன்று படத்தை எந்த ஜேனரிலும் அடைக்க முடியாது – அதர்வா முரளி

by by Nov 19, 2024 0

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட நடிகர் அதர்வா படம் குறித்து பேசுகையில், “கார்த்திக்கின் ‘துருவங்கள் பதினாறு’ படம் பார்த்ததில் இருந்தே அவருடன்…

Read More

கங்குவா திரைப்பட விமர்சனம்

by by Nov 15, 2024 0

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம். 

1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது.  அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty…

Read More