October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தாயின் பெருமை சொல்லும் ‘அம் ஆ’ மலையாள படம் ஏப்ரல் 18-ல் தமிழில் வெளியாகிறது..!

by by Apr 15, 2025 0

‘அம் ஆ’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை அறிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள்…

Read More

நாங்கள் திரைப்பட விமர்சனம்

by by Apr 13, 2025 0

தமிழில் அரிதான முயற்சியாகதான் இதுபோன்று ‘பேரல்லல் சினிமா’ எனப்படும் பரீட்சார்த்த முயற்சியிலான படங்கள் வருகின்றன.

அதற்காகவே படத்தை இயக்கிய அவிநாஷ் பிரகாஷையும்… முக்கியமாகப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்ட ஜிவிஎஸ் ராஜுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.

வணிக சினிமாவைப் பொறுத்த அளவில் கதைகள் பெரும்பாலும் தொழிலாளராக இருக்கும் ஒரு ஹீரோ படம் முடிவதற்குள் பெரிய தொழிலதிபராக வெற்றி பெற்றதைச் சொல்லி முடியும்.

ஆனால் இந்தப் படத்து நாயகன் ராஜ்குமார் தான் நடத்தி வந்த பள்ளி, எஸ்டேட், வீடு, கார் எல்லாவற்றையும்…

Read More

சினிமாவுக்குள் என்னை இழுத்தவர் அல்லு அர்ஜுன்…! – நடிகை திருப்தி Open Talk

by by Apr 13, 2025 0

மொழி, இன, பேதங்கள் இல்லாத சினிமாவுக்குள் வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கலைஞர்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி பூனாவில் இருந்து கோலிவுட் நோக்கி சிறகடித்து வந்திருக்கிறார் திருப்தி அனுமந்த் போஸ்லே. 

நடிக்கும் ஆர்வத்தில் வந்திருப்பதால் நாம் அவரை நடிகை என்றே கொள்வோம். 

அண்ணன் கலெக்டர், அப்பா புரபஸர் என்பதுடன் டாக்டர்களும் எஞ்சினியர்களுமாக நிறைந்த குடும்பத்திலிருந்து முதல் முதலில் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு கோலிவுட்டில் இரங்கியிருக்கிறார் திருப்தி. 

படித்த குடும்பம் என்பதால் அதற்கு மதிப்பு கொடுப்பது போல் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்…

Read More

இசைஞானி அல்ல… இசை இறைவன்..” – ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் சீமான்

by by Apr 9, 2025 0

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின்…

Read More

சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி..! – ஸ்ருதி நாராயணன்

by by Apr 8, 2025 0

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது…!

‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி…

Read More

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணி சேரும் பான் வேர்ல்ட் சினிமா..!

by by Apr 8, 2025 0

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்…

‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…

Read More

வெள்ளிவிழா வருடத்தில் மீண்டும் இணையும் பிரஷாந்த், இயக்குநர் ஹரி..! – தயாரிக்கிறார் தியாகராஜன்

by by Apr 6, 2025 0

*டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்*

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.

நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி…

Read More

டெஸ்ட் (TEST) OTT திரைப்பட விமர்சனம்

by by Apr 4, 2025 0

இதுவரை நாம் தயாரிப்பாளராக மட்டுமே அறிந்து வைத்திருக்கும் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ எஸ். சஷிகாந்த் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராகி இருக்கும் படம்.

மாதவன், சித்தார்த், நயன்தாரா – இந்த மூன்று பேரைச் சுற்றி நடக்கும் உணர்ச்சி மயமான திரில்லர் படம் இது. 

தண்ணீரில் இருந்து பெறப்படும் சக்தியில் இயங்கும் என்ஜின் மூலம் வாகனத்துக்கு ஆகும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்ற ப்ராஜெக்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கான அனுமதியைப் பெற…

Read More

இஎம்ஐ (EMI) திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2025 0

இஎம்ஐ என்கிற மாதத் தவணைத் திட்டங்கள்தான் அனேகமாக எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலும் பொருள்களைச் சேர்க்க உதவும் ஒரே வழியாக இருந்து வருகிறது.

‘ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற அளவில் வருமானத்துக்கு அதிகமான அளவில் மாதத் தவணைத் திட்டங்களில் சிக்கிக்கொண்டால் இன்றைய நிலவரப்படி அதை வசூலிக்க வங்கிகள் எப்படி எல்லாம் மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. 

படத்தை இயக்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜே கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார். 

அம்மா செந்திகுமாரியுடன் வாழ்ந்து வரும் பட்டதாரியான அவர்…

Read More

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

by by Apr 3, 2025 0

*ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு*

சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய…

Read More