Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்ஷி.
அவரது நடிப்பில் வரவிருக்கும் “வேலன்”…
Read More
சென்னையில் நடைபெற்ற RRR பட பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது…
நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது.
இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள்…
Read More
தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் இன்று காலமானார்.
இவர் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகன். பல தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார்,
திரைத்துறையில் இசையமைப்பாளர் வித்யாசகர் மூலமாக தில் படத்தில் இடம் பெற்ற ”கண்ணுக்குள்ள கெளுத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்யாசாகராலயே வழங்கப்பட்டது. ‘பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே…’ என்ற பாடல் மூலமாக 2002ம் ஆண்டு மக்களிடம்…
Read More
நன்றாக வைத்தார்கள் ரவுடி பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனத்துக்கு பெயர் – நயன்தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் சினிமா கம்பெனியைத்தான் சொல்கிறோம். பெயரில் என்ன இருக்கிறது… நல்ல படம் எடுத்தால் சரிதான் என்று அவர்கள் எடுத்த படங்களை ஆதரிக்கவே செய்தோம்.
போலீஸ் கதைகளில் இதுவரை நல்ல போலீஸ், தீய போலீஸ் என்று இரண்டு வகை போலீஸைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் போலீஸ் எப்படி இயங்குகிறார்கள் என்று சொன்ன படங்கள் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடாத இரண்டு போலீஸ் விஷயங்களை முன்னிறுத்தி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்.
அவை பல காலமாக கேட்கப்பட்டு வரும் போலீஸ் சங்க விவகாரம் ஒன்று. இன்னொன்று நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காவலர்களின் தற்கொலை. இதற்காகவே பிராங்க்ளினைப் பாராட்டலாம்.
திருவெறும்பூர் காவல் நிலையத்தில்…
Read More
காலம் காலமாக காதல் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. அது ஒரு தலைக் காதலோ, இருதலைக் காதலோ அல்லது முக்கோணக் காதல் கதையோ, அதை எப்படிச் சொல்கிறார்கள், என்ன விதமான பிரச்சனைகளை உள்ளே வைத்து என்ன சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தே காதல் கதைகள் வேறுபடுகின்றன.
எதிர்மறையான தலைப்புகள், தவறான உறவுகள், கொடூரம் கொண்ட திருப்பங்கள், சாதிய கலப்புகள் என்றெல்லாம் தமிழ் சினிமா வேறு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்க நல்ல விஷயங்களை சொல்லும் நேர்மறையான கதைகளைக் கொண்ட படங்கள் அருகி வருகின்றன.
இருபத்து ஏழரை மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான ஒரு திரில்லர்.
படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை பார்க்கிறார். சமையல் ஷோ நடத்தி கொண்டிருந்தவருக்கு செய்திப் பிரிவுக்கு புரமோஷன் கிடைக்க அவர் ஏற்றுக் கொள்ளும் முதல் வேலையே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகிறது.
குவைத்தில் வேலை பார்க்கும் கிஷோரும் அவரது தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க அவர்கள் ஏற்படுத்திய ஒரு விபத்துக்காக ஐந்து வருடம் கழித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. அதிலிருந்து…
Read More
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.
நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.
எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.
இயக்குனர்…
Read More