September 25, 2026
  • September 25, 2026
Breaking News
December 26, 2021

பிரபல பாடகர் நடிகர் மாணிக்க வினாயகம் காலமானார்

By 0 635 Views

தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் இன்று காலமானார்.

இவர் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகன். பல தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார்,

திரைத்துறையில் இசையமைப்பாளர் வித்யாசகர் மூலமாக தில் படத்தில் இடம் பெற்ற ”கண்ணுக்குள்ள கெளுத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்யாசாகராலயே வழங்கப்பட்டது. ‘பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே…’ என்ற பாடல் மூலமாக 2002ம் ஆண்டு மக்களிடம் பிரபலமான அவர் 800 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

‘திருடா திருடி’ படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். அந்தப் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் அப்பாவாக வந்து பலரையும் கவர்ந்திருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்தார்.

73 வயதாகும் மாணிக்க விநாயகம் இன்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்குத் திரையுலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது.