October 7, 2026
  • October 7, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கேப்டன் படத்தில் ஆர்யா எதிர்கொள்வது ஏலியன் அல்ல – சக்தி சௌந்தர்ராஜன் விளக்கம்

by by Sep 1, 2022 0

தன் ஒவ்வொரு படங்களிலும் சயின்ஸ் பிக்ஷன் விஷயங்களை அடிநாதமாகக் கொண்டு படங்களை இயக்கி வரும் சக்தி சௌந்தர்ராஜன் இப்போது ஆர்யாவை வைத்து இயக்கி வரும் ‘ கேப்டன் ‘ படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஏலியன் கதையை சொல்லி இருக்கிறார் என்ற பேச்சு இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் படம் குறித்து விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள கேப்டன் டீமைச் சேர்ந்த, கேப்டன் சக்தி சௌந்தரராஜன், நாயகன் ஆர்யா மற்றும் படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், பரத்,…

Read More

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகம் – ஹிட்லிஸ்ட் பட அறிமுக விழா

by by Sep 1, 2022 0

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம்.

RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் “ஹிட்லிஸ்ட்”. நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில்…

Read More

டிவி நடிகை மகாலட்சுமியை மணந்த முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்

by by Sep 1, 2022 0

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,…

Read More

விஜய் சேதுபதி சூரி நடித்த விடுதலை படத்தின் வெளியீட்டு தேதி விரைவில்

by by Sep 1, 2022 0

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் .

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment நிறுவன தயாரிப்பாளர்கள் 

திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை…

Read More

கோப்ரா திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2022 0

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும். 

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை சொல்லி இருப்பார் போலிருக்கிறது.

விக்ரமுக்கு அவ்வளவு நடிப்பு பசி. ஆனால் தசாவதாரம் போல ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு காரணம், ஒரு கதை என்றில்லாமல்…

Read More

நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2022 0

ஒரு காலத்தில் பெண்களின் உணர்வுகளை கூட ஆண்களே எழுதிக் கொண்டிருந்தார்கள். உழவனின் பிரச்சனைகளை, உட்கார்ந்து யோசிப்போர் சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்கள். காலம் மாறி பெண்ணின் கைக்கு பேனா வந்ததும், ஏர் பிடித்தவன் கையில் எழுதுகோல் வந்ததும் அவர்களின்  அனுபவங்கள் உதிரமும், உணர்ச்சியுமாக  நம்மிடம் பேசத் தொடங்கின.

அப்படித்தான் ஒடுக்கப்பட்டோரின் குரலை அவர்களே பதிவு செய்ய காலம் கனிந்து வந்திருக்கும் இன்றைய வேளையில் அதைச் செம்மையாக முன்னெடுத்து வருகிறார் பா.ரஞ்சித். அவர் இயக்கும் படங்களாகட்டும், தயாரிப்பில் உருவாகும் படங்களாகட்டும்…

Read More

ஜான் ஆகிய நான் திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2022 0

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ அரசியல் படம் போல் இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். ரிவஞ்சுடன் கூடிய ஆக்சன்தான் இந்த படத்தின் களம்.

சமூகம் கண்டுகொள்ளாமல் விட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லி இருப்பதுடன் ஊடகங்களில் வெளியாகும் பொய் கூட எப்படி உண்மையாகி விடுகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அப்பு கே.சாமி. அவரே படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

டார்க் லைட் புரொடக்‌ஷன்ஸ்…

Read More

டைரி திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2022 0

இந்தப் படம் எந்த ஜேனரைச் சேர்ந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. துப்பறியும் கதையாக தொடங்கி ஹாரர் படமாக முடியும் இது போன்ற ஒரு படம் தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம்.

அருள்நிதிக்கு என்றே கதைகளை மூளையை கசக்கி எழுதி இருப்பவர்களில் இந்தப் பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு புது ரகம்.

அருள் நிதி அவரது வழக்கப்படியே உதவி ஆய்வாளராக வந்தாலும் முடிவு பெறாத கேஸ் ஒன்றை அவர் கையாள நேரும் போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்ய…

Read More

ஆர்யாவின் கேப்டன் படத்துக்கு என் அன்பு உண்டு – சந்தானம்

by by Aug 26, 2022 0

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்*

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது. 

இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன்…

Read More

ரசிகர்கள் காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது – கோப்ரா விழாவில் விக்ரம்

by by Aug 26, 2022 0

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ…

Read More