February 13, 2026
  • February 13, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

சீறு திரைப்பட விமர்சனம்

by by Feb 8, 2020 0

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை எதிர்க்கும் மனத் திண்மையை பெண்களுக்கு ஏற்படுத்த ஆண்கள் உறுதி ஏற்று பாரதி சொன்னது போல் ‘சீற’ வலியுத்துகிறது படத்தின் கதை.

மாயவரம் பகுதியில் லோக்கல் டிவி நடத்திக்கொண்டு அன்பான தங்கையுடன் வாழ்ந்து வரும் ஜீவாவுக்கு பெண்களின் அபயக் குரல் எங்காவது கேட்டால் போதும். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சீறி எழுந்து வந்து சினம் கொண்டு புரட்டி எடுத்து விடுவார். அப்படித்தான் தொடங்குகிறது கதை….

Read More

டகால்டி திரைப்பட விமர்சனம்

by by Feb 1, 2020 0

ஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த்.

அதில் கில்லி, போக்கிரி தொடங்கி அதிசயப்பிறவி வரை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு இந்திய நிலமெங்கும் டிராவல் அடிக்கிற ஆக்ஷன் லைன் எனும்போது தனியாகக்…

Read More

உற்றான் திரைப்பட விமர்சனம்

by by Jan 31, 2020 0

படிக்கிற வயதில் படிக்காமல், இன்ன பிற வேலைகள் எல்லாம் செய்தால் என்ன ஆகும் என்று சொல்ல வந்திருக்கும் இன்னொரு படம். அதை ஒரு முன்னணி கமர்ஷியல் ஹீரோவுக்குரிய திரைக்கதை உத்தியான சண்டை, பாட்டு, சண்டை, பாட்டு என்று அடுக்கி ஒரு உணர்ச்சி மயமான கிளைமாக்ஸ் வைத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஓ.ராஜா கஜினி.

ஆனால், இதில் நடித்திருப்பதோ புதுமுகம் ரோஷன் சுபாஷ். ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான திரைக்கதைக்கு ஒரு புதுமுகம் தாங்கியிருப்பதே பெரிய விஷயம். அந்த வகையில் ரோஷன்…

Read More

மாயநதி திரைப்பட விமர்சனம்

by by Jan 31, 2020 0

‘காயமே இது பொய்யடா’ என்பது சித்தர் பாடல். அது ஒட்டுமொத்த மனித வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் இதில் காதலை ‘மாயநதி’ என்று சொல்லி மனிதத்தின் அடிப்படை உணர்வுக்கெதிராகவே கேள்வியை முன்வைக்கிறார் இயக்குநர் அசோக் தியாகராஜன்.

டைட்டில் போடுகையில் ஒரு அப்பா தன் மகளுக்கு தந்தை சொல் மீறாத ‘காசாபியாங்கா’ கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். தந்தை சொல் மீறாமல் இருந்ததால் மாண்டுபோன அவன் போல் தான் இருக்க மாட்டேன் எங்கிறாள் கதை கேட்ட மகள். அங்கேயே கதைக்கான அடிநாதம் புரிந்து…

Read More

தர்பார் திரைப்பட விமர்சனம்

by by Jan 9, 2020 0

கிராமப்புறங்கள் நகர்மயமாக்கப்பட்டு திருவிழாக்கள் போன்ற பெருவிழாக்கள் வழக்கொழிந்துவிட்ட எந்திர வாழ்வில் சாமானியர்களுக்கு ரஜினி போன்ற நட்சத்திரங்களின் பட வெளியீடுகள்தான் திருவிழாக்கள் என்றாகிவிட்டது. அப்படி பொங்கல் விழாவை முன்னிட்டு வந்திருக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான் ரஜினியின் ‘தர்பார்.’

உலகம் முழுக்க மலிந்துவிட்ட போதை மருந்து மாபியாக்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்து தன் கோரக்கரங்களை விரித்து பெருநகரங்களில் வியாபித்து விட்டார்கள். அப்படி மகாராஷ்டிரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யத்தை போலீஸ் கமிஷனரான ஆதித்யா அருணாசலம் என்ற ரஜினி எப்படி வீழ்த்தினார் என்பதுதான்…

Read More

அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்பட விமர்சனம்

by by Jan 5, 2020 0

கதை எந்தக் காலக்கட்டத்தில் நடக்கிறது என்றெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத் தேவையில்லாமல் லாஜிக்குடன் மூளையையும் கழற்றி வைத்துவிட்டு ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றால் ஓரளவுக்கு அதை நிறைவேற்றுவான் – அவனே ஸ்ரீமன் நாராயணா.

ஒரு ரயிலைக் கொள்ளயடித்து செட்டிலாவதை லைஃப் டைம் ஆம்பிஷனாக வைத்திருக்கும் ‘ஆபிரா’ எனும் கொள்ளையர் கூட்டம். ஆனால், அமராவதி ஏரியாவில் கிட்டத்தட்ட சம்பல் கொள்ளையர்களைப் போல அபாயகரமானவர்களாக இருக்கும் அவர்களால் முடியாத அந்த கொள்ளையை ‘ஜஸ்ட்…

Read More

தொட்டு விடும் தூரம் திரைப்பட விமர்சனம்

by by Jan 3, 2020 0

சமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று அழகான பாஸிட்டிவ்வான தலைப்பு வைத்ததற்கே இந்த இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு வாழ்த்து சொல்லலாம்.

அது மட்டுமல்லாமல் அந்தத் தலைப்புக்குள் ஒரு காதல் கதையையும், அனைவரும் பின்பற்றக் கூடிய ஒரு…

Read More

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

by by Dec 27, 2019 0

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது. 

இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட ஹீரோ…

Read More

வி1 திரைப்பட விமர்சனம்

by by Dec 26, 2019 0

‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான்.

ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள்.

அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் இருக்க,…

Read More

சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்

by by Dec 24, 2019 0

தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார்.

காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின் தன்மை என்றும் மாறுவதே இல்லை.

இந்த உலகம் அறிந்த உண்மையை இன்னொரு முறை உரக்கச் சொல்ல ஹலிதா ஷமீம் தேர்ந்தெடுத்திருப்பது நான்கு ‘பருவ’…

Read More