April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் தள்ளிப் போகும் காட்டேரி

by by Dec 23, 2020 0

நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக இருந்த காட்டேரி திரைப்படம் தள்ளிப் போவதாக படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அதற்கு காரணம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாடெங்கிலும் பரவி வருவதாக வரும் குழப்பமான செய்திகளை அடுத்து இந்நிறுவனம் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடல்கள், டீஸர், டிரைலர் என்று அனைத்தும் வெளியான நிலையில் இப்படி படம் தள்ளிப் போவது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சமூக…

Read More

இதயம் துடித்துக் கொண்டிருக்கும் இயக்குனரை கொன்றுவிடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

by by Dec 23, 2020 0

கடந்த 2015-ம் ஆண்டு கரி என்கிற படத்தை இயக்கி மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் ஷாநவாஸ். அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘ சுஃபியும் சுஜாதயும்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை இயக்கியது ஷாநவாஸ் என்பதால் அவருக்கு மேலும் புகழ் கூடியது.

இந்நிலையில், காந்திராஜன் என்ற படப்பிடிப்பில் இயக்குநர் ஷாநவாஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read More

பிரசாத் ஸ்டுடியோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் இளையராஜா

by by Dec 22, 2020 0

ஐகோர்ட்டில் பிரசாத் ஸ்டுடியோவின் தரப்பில், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னதாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று (செவ்வாய்) மாலைக்குள் தனது கைப்பட இளையராஜா…

Read More

கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று

by by Dec 20, 2020 0

சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது.

இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய…

Read More

பழைய பாடல்களை புதிய குரல்களில் கேட்க உதவும் Carvaan Lounge Tamil

by by Dec 19, 2020 0

“Carvaan Lounge Tamil”, இது “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து.

இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர். 

பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி “நினைத்தாலே இனிக்கும்” என்கிற திரைப்படத்தில் அமைந்த  “நம்ம ஊரு சிங்காரி” எனும் பாடலின் வீடியோ பதிப்பு  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது.

இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள்…

Read More

நடிகைகளே என்னை மாதிரி வாழாதீங்க – ஷகிலா

by by Dec 19, 2020 0

வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போதைய சினிமா உலகில் அதிகம் கவனத்துக்குள்ளாகும் ஜானராக உள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”.

இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நட ந்தது.

நிகழ்வில் ஷகிலா பேசியதிலிருந்து…

“…

Read More

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் 200 மில்லியன் டாலர் ஹாலிவுட் படத்தில் தனுஷ்

by by Dec 18, 2020 0

நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில், கிறிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற ரஸ்ஸோ சகோதரர்கள், இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர்.

தி கிரே மேன் என்ற நாவலைத் தழுவி, 200 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச ஷூட்டிங் லொக்கேசன்கள் இறுதி செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இரு சிஐஏ உளவாளிகளை சுற்றிச் சுழலும் கதையில்…

Read More

சந்தானம் மகன் பிரபுதேவா படத்தில் அறிமுகம் ஆகிறார்

by by Dec 18, 2020 0

கடந்த 2014 ஆம் வருஷம் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ‘மஞ்சப்பை’ படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. அடுத்து, ஆர்யாவை வைத்து கடம்பன் படத்தை இயக்கியிருந்தார் ராகவன்.

தற்போது, தனது மூன்றாவது படமாக பிரபுதேவாவை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில், சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகிறாராம்.

தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹிரா’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனைச் சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம்…

Read More

தியேட்டர்களை குடோன்களாக மாற்ற அமேசான் முயற்சி – திருப்பூர் சுப்ரமணியம் பகீர்

by by Dec 17, 2020 0

இந்த ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை மனதில் வைத்துக்கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றி வருவதாகத் தெரிகிறது.

இந்தச் செய்தியைப் பகிர்ந்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:

“அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் திரையிட்டால் கிடைக்கும் லாபத்தைப் போல…

Read More

கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது ஷகிலா திரைப்படம்

by by Dec 17, 2020 0

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா வாழ்க்கை திரைப்படம் ஆனது .

1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா.

உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ்.

இப்படம் நடிகை…

Read More