July 5, 2025
  • July 5, 2025
Breaking News
August 21, 2021

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்

By 0 987 Views

நல்லெண்ணெய் விளம்பரத்தால் புகழ்பெற்று நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்ட நடிகை சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.

அவருக்கு வயது 56. கணவர், மகளுடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.

சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா”. இந்தப் படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். 2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது. 

சித்ராவின் மகள் ஸ்ருதி இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். ஸ்ருதியை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார் சித்ரா. 

நேற்று இரவு 12′ மணிக்கு மாரடைப்பால் வீட்டிலேயே காலமான சித்ரா தினம் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு அளிப்பாராம். ஏராளமான காக்கைகள் இவர் வீட்டின் மொட்டை மாடியில் நேரம் தவறாமல் வந்து, உணவுக்காக காத்திருக்கும் என்பற்காகவே வெளியூர் பயணத்தை தவிர்ப்பாராம் சித்ரா.

சித்ராவின் கணவர் சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கணவரை பராமரித்து வந்த நிலையில் இவர் காலமானது மிகுந்த வேதனைக்குரியது.

இன்று மாலை 5′ மணிக்கு சித்ராவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது!