July 5, 2025
  • July 5, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூர்யா தயாரிப்பில் கார்த்திக்கு ஜோடி ஆகும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்
September 5, 2021

சூர்யா தயாரிப்பில் கார்த்திக்கு ஜோடி ஆகும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்

By 0 532 Views

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

‘சூரரைப் போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்தது.

இதையடுத்து
2டி நிறுவனம் அடுத்த படைப்பாக  “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தை தயாரிக்கிறது.

இதில் கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

 ‘ கொம்பன் ‘ முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக,  கிராமத்து பின்னணியில் விருமன் அமையும்.

‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் (அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.

இந்த அதிதி வேறு யாருமல்ல பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள்தான்.

சூர்யா ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடிக்க அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அறிமுகமாவது கோலிவுட்டில் மட்டுமல்லாது ரசிகர்களிடத்திலும் புதிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

அதிதியை தான் டிவிட்டர் பக்கம் மூலம் சூர்யா வரவேற்று இருக்கிறார்.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.