October 5, 2026
  • October 5, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

சூர்யா 43 – மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

by by Oct 26, 2023 0

‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 

சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

Read More

ரசிகர்கள் என்னை பாகுபலியாக பார்க்கவே ஆசைப்படுகிறார்கள்..! – பிரபாஸ்

by by Oct 23, 2023 0

இன்றைக்கு பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸுக்கு 43 வது பிறந்த தினம். இந்த தினத்தில் அவரது வாழ்க்கையை ஒரு மறு பார்வை பார்க்கலாம்.

‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ், பான் இந்தியா முறையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படங்களின் தனிப்பெரும் ஹீரோவாகி, அவர் சம்பளமும் ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்தாலும் டோலிவுட் சினிமா டார்லிங்காக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி முதல் பாகத்தின் வெளியீட்டுக்கு பிறகு தென்னிந்தியாவின்…

Read More

நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக போராடுகிறேன் – நடிகர் ரஹ்மான்

by by Oct 17, 2023 0

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும்.

ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும்…

Read More

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா – தி வாரியர்ஸ் அரைஸ்’ டீம் மும்பையில் முகாம்

by by Oct 15, 2023 0

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான்…

Read More

600 கோடி கிளப்பில் இணைந்து ஜவான் செய்த பாலிவுட் சாதனை

by by Oct 3, 2023 0

புதிய சாதனை ! 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான் மூலம் 25 நாட்களில் இந்த சாதனையை புரிந்த ஒரே நடிகர் ஷாருக்கான் ! இதுவரை இந்த சாதனையை செய்த ஒரே இந்திப் படமெனும் பெருமையை ஜவான் பெற்றுள்ளது !

இந்திப் படமொன்றின் மிக உயர்ந்த 4வது வார வசூல் சாதனையும் இதுவே!

ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படமாகும்,…

Read More

ஒரே ஆண்டில் ஜவான் பதான் மூலம் வசூல் சாதனையை நிகழ்த்திய ஷாருக்..!

by by Sep 30, 2023 0

இந்தியாவின் இரண்டு மிக உயர்ந்த வசூல் சாதனைகள், இப்போது ஷாருக்கான் வசம் வந்தது!!

ஒரே ஆண்டில் ஜவான் மற்றும் பதான் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் ஷாருக்கான்.

ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600cr கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது. மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது !

இன்று, ஜவான் இந்திய சினிமா வரலாற்றில்…

Read More

சந்திரமுகி 2 படத்தைப் பார்த்துப் பாராட்டிய ரஜினிகாந்த்

by by Sep 29, 2023 0

*சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து மழையில் ‘சந்திரமுகி 2’ படக் குழுவினர்*

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் பி வாசு…

Read More

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்-பார்ட் 1 சீஸ்ஃபயர்’ பட வெளியீட்டு தேதி

by by Sep 29, 2023 0

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை…

Read More

நவீன தொழில்நுட்பத்தில் 12 வயது மாணவி இயக்கிய குண்டான் சட்டி

by by Sep 29, 2023 0

குண்டான் சட்டி படத்தின் கதை பற்றி,

“ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த நல்ல கருத்தையும் மாணவ பருவத்திலேயே அறிவுறுத்தினால் பிற்காலத்தில் வாழ்வியல் முறை சிறப்பாக அமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது..!” என்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தி . 

Read More

ஜவான் படத்துக்கு பை ஒன் கெட் ஒன் சலுகையை அறிவித்தார் ஷாரூக்

by by Sep 28, 2023 0

தனது மகனுடன் படம் பார்க்க முடியாத ரசிகருக்கு ஜவான் டிக்கெட்டுகளை தள்ளுபடியில் வழங்கி, நெகிழவைத்த SRK 

இந்த இனிமையான செயலைத் தொடர்ந்து, ரெட் சில்லிஸ் என்ட்ரெய்ன்மென்ட் *பை-ஒன்-கெட்-ஒன் டிக்கெட் இலவச சலுகையை அறிவித்துள்ளது*

ரசிகர்களுடன் உரையாடும் #AskSRK அமர்வில் ஒரு ரசிகரின் இதயப்பூர்வமான வேண்டுகோளைக் கண்டார். டிக்கெட்கள் கிடைக்காத நிலையில் தனது மகனுடன் ஜவான் மாயா ஜாலத்தை அனுபவிக்க முடியவில்லை என தெரிவித்த ரசிகருக்கு தனது ரெட் சில்லிஸ் என்ட்ரெய்ன்மென்ட் நிறுவனத்திடம் டிக்கெட்களில் அவருக்கு தள்ளுபடி வழங்க சொல்லி…

Read More