5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி
மதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார்.
அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது.
“பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம்.
கொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…
கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தமிழகத்தின்் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும்…
Read More
பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி
பதிலடி கார்ட்டூன் வெளியிட்டு பின்னர் நீக்கிய எல் கே சுதீஷ்
விஜயகாந்த் காலில் சகல அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்று கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, டெலிட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ்.
அதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.
“கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.
அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.
அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்” என்றிருக்கிறார்…
Read More
சசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும்…
Read More
கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார்.
இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல்…
Read More
Breaking News விஜய் ரசிகர்கள் மீதான அமைச்சர் செல்லூர் ராஜுவின் விமர்சனம்
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு.
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு.
மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு.
மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என உத்தரவு…
Read More
கொரோனா சிகிச்சையில் இருந்த எம் பி வசந்தகுமார் (வசந்த் அன் கோ நிறுவனர்) காலமானார்
இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது…
தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன.
முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! ” என்றார்.
அதன் பின்னர்…
Read More