April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்
August 27, 2020

இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்

By 0 853 Views

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது…

தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! ”  என்றார்.

அதன் பின்னர் நீட் தேர்வு, இ-பாஸ் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர்…

 ” மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.

யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும்..! ” என்றார்.