March 20, 2023
  • March 20, 2023
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • கொரோனா சிகிச்சையில் இருந்த எம் பி வசந்தகுமார் (வசந்த் அன் கோ நிறுவனர்) காலமானார்
August 28, 2020

கொரோனா சிகிச்சையில் இருந்த எம் பி வசந்தகுமார் (வசந்த் அன் கோ நிறுவனர்) காலமானார்

By 0 540 Views
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
 
அதன் காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
 
அப்படி கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் தன் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
 
வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் நிறுவனர் ஆகவும் அவர் இருந்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். அத்துடன் அவரது மகன் விஜய் வசந்த் திரைப்படங்களில் நடித்து வருவதும் தெரிந்த விஷயம்.
 
தொடர்ந்து வசந்தகுமார சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந் தாலும் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
எப்படியும் உடல்நிலை தேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
 
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி அளித்திருக்கிறார்.