July 15, 2025
  • July 15, 2025
Breaking News
September 3, 2020

பதிலடி கார்ட்டூன் வெளியிட்டு பின்னர் நீக்கிய எல் கே சுதீஷ்

By 0 727 Views

விஜயகாந்த் காலில் சகல அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்று கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, டெலிட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ். 

அதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.

“கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.

அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.

அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்” என்றிருக்கிறார் எல்.கே.சுதீஷ்.

2016 இல் வெளியாகி சுதீஷ் வெளியிட்டு நீக்கிய கார்ட்டூன் மேலே… கீழே தினமலரின் சமீபத்திய கார்ட்டூன்…

Dinamalars latest Cartoon

Dinamalars latest Cartoon