August 30, 2025
  • August 30, 2025
Breaking News
October 20, 2021

பாலியல் புகார் தொடர்பில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு

By 0 591 Views

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது தெரிந்த விஷயம்.

தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து வந்த தகவலில் 16 வ்யது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் ஸ்டேடிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காததால் நிர்வாகிகளான ரோஹித் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது.