August 20, 2026
  • August 20, 2026

பிச்சைக்காரன் படம் நீங்கள் போட்ட பிச்சை – நெகிழ்ந்த விஜய் ஆண்டனி

by on May 15, 2023 0

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் திரைக்கதை திலகம் கே பாக்யராஜ் பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசியைப் புகழ்ந்து பேசினார். “டிஷ்யூம் படத்தில் நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்னால் வந்திருக்க முடியாது. […]

Read More

ASTERIX & OBELIX:THE MIDDLE KINGDOM ஆங்கிலப் பட விமர்சனம்

by on May 13, 2023 0

Asterix & Obelix கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் வரிசையில் இதுவரை நான்கு படங்கள் எடுக்கப்பட்டு இருக்க, ஐந்தாவது படமாக வந்திருக்கும் Asterix & Obelix: The Middle Kingdom எனும் இந்தப் படம் வித்தியாசமானது. அதன் காரணம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இந்தப்படம் வந்திருப்பது சிறப்பு. இதன் கதைச் சுருக்கம் இதுதான்… Asterix மற்றும் Obelix இருவரும் சீனப் பேரரசரின் ஒரே மகளான இளவரசி […]

Read More

ஃபர்ஹானா திரைப்பட விமர்சனம்

by on May 13, 2023 0

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னரே மாறிவிட்டனர். பெண்ணுக்கு இலக்கணம் சொல்லிய காலம் போய் புதுமைப் பெண்ணுக்கு உரிய இலக்கணம் கடந்த தலைமுறையில் சொல்லப்பட்டு விட்டது.  ஆனால் இது மட்டுமே போதுமானதா? பெண்களுடைய ஆசைகள், தேவைகள் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தப் படம். பாரம்பரிய ஒழுக்கத்தில் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய பெரியவர் கிட்டி, தன் மகள் ஐஸ்வர்யா ராஜேஷையும் அம்முறையிலேயே வளர்த்து ஜித்தன் ரமேஷுக்கு திருமணம் […]

Read More

குட் நைட் திரைப்பட விமர்சனம்

by on May 11, 2023 0

ஈரைப் பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவது என்று ஒரு சொல்லாடல் கிராமிய வழக்கில் உண்டு. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சாதாரணப் பிரச்சினையை வைத்து இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்து அதிசயத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் மணிகண்டனுக்கு ஒரு பிரச்சனை – வேறு ஒன்றும் இல்லை, தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவதுதான். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை கூட அலற வைக்கும் அவரது குறட்டையால் […]

Read More

தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றம் பெற்ற அமைச்சர்கள்

by on May 11, 2023 0

திமுக அரசு பதி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமைச்சர்கள் மாற்றப்பட்டதில் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார். அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார். இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் […]

Read More

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

by on May 11, 2023 0

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அது மட்டும்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனையா என்றால் ‘அது இல்லை – இன்னொரு பெரிய வில்லன் இருக்கிறான்’ என்று இந்தப் படத்தில் அடையாளம் காட்டுகிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். தமிழகத்தின் வறட்சி மாவட்டமான ராமநாதபுர கிராமத்தில் நடக்கிறது கதை. அங்கே இருக்கும் இரண்டு சாதிப் பிரிவினருக்குள் மோதல் ஏதும் ஏற்பட்டு […]

Read More

சிறுவன் சாமுவேல் திரைப்பட விமர்சனம்

by on May 9, 2023 0

வழக்கமாக நாம் பார்க்கும் வணிக ரீதியான படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான படம் இது. அதனால் வழக்கமான சினிமா ரசனையை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இந்தப் படம் பார்க்கப் போக வேண்டும். இலக்கிய உலகில் சிறுவர்களுக்கு என்று இலக்கியம் படைக்க சிலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கான படம் எடுப்பது மிகவும் அரிதாகத்தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘சாது ஃபெர்லிங்டன்’ இயக்கியிருக்கும் இந்தப் படம் முற்றிலும் சிறுவர்களுக்கான படம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். குழந்தைகளுக்கான […]

Read More

தங்கர் பச்சானுக்கு மறுபிறவி தரும் படத்தைத் தயாரித்ததில் பெருமை – துரை வீரசக்தி

by on May 8, 2023 0

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் துரை வீரசக்தி பேசும்போது, தங்கர் பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒருமுறை இந்த கதையை தங்கர் பச்சான் கூறினார். #OMG படம் முடிந்ததும், இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்த படத்தை தயாரிக்க யாரும் […]

Read More

மாமன்னன் படத்துக்காக ‘இசைப்புயல்’ இசையில் ‘வைகைப் புயல்’ பாடிய பாடல்

by on May 8, 2023 0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.’ கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘மாமன்னன்’ படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் […]

Read More

ஜவான் பட வெளியீடு தாமதம் ஏன்..? – ஷாருக் கான் விளக்கம்

by on May 8, 2023 0

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல விருதுகளை வென்ற இயக்குநரான அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் […]

Read More
CLOSE
CLOSE