August 20, 2026
  • August 20, 2026

டக்கர் இயக்குனர் கார்த்திக்குடன் இன்னும் இரண்டுபடங்கள் நடிப்பேன் – சித்தார்த்

by on May 30, 2023 0

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது, “எல்லாருக்கும் வணக்கம்! எங்கள் அனைவருக்குமே இந்தப் படத்தோடு நீண்ட பயணம் உள்ளது. இசைக்காக எனக்கான நேரத்தை அமைத்துக் கொடுத்த […]

Read More

அதுல்யா சீனியர் கேர் அறிமுகப்படுத்தும் டிமென்ஷியா நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவை

by on May 30, 2023 0

சென்னை, 30 மே 2023 – இந்தியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தால், சென்னை, பல்லாவரத்தில், புதிய அறிவாற்றல் இழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகள் துறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் மாண்புமிகு அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதுல்யா சீனியர் கேரின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண், நிறுவனரும் […]

Read More

மீனா சாப்ரியாவை பார்த்தால் என் அன்னையின் நினைவு வருகிறது – ஐஸ்வர்யா ராஜேஷ்

by on May 29, 2023 0

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது. யார் இந்த மீனா சாப்ரியா? 17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, […]

Read More

விரட்டி வந்து பேமென்ட் கொடுத்த லைசென்ஸ் பட தயாரிப்பாளர் – பழ.கருப்பையா

by on May 29, 2023 0

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய […]

Read More

2018 திரைப்பட விமர்சனம்

by on May 27, 2023 0

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்தாலும் எந்த ஒரு நடிகரும் தனிப்பட்ட ஹீரோ இல்லை என்கிற பொருளில் “ஒவ்வொருவரும் ஹீரோதான்…” என்று சொல்லியே இந்த படத்தைத் தொடங்குகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அத்தனை சீக்கிரம் மறப்பதற்கு இயலாது. செய்திகளாகவும், செய்திப் படங்களாகவும் நாம் […]

Read More

சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் சரத்குமார் அசோக் செல்வன்

by on May 27, 2023 0

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தொழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி […]

Read More

தீராக்காதல் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

காதல் கதைகளுக்கு இதைப் போன்று இலக்கியத்தரமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். அப்படி ஒரு தலைப்பைப் பிடித்ததுடன் எந்தக் காலத்திலும் அலுக்காத முன்னாள் காதலர்கள் இந்நாளில் இணைந்தால் என்ன ஆகும் என்கிற கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். இந்த லைனில் ஏகப்பட்ட கதைகள் வந்தாயிற்று. இந்தக் கதையில் புதுமை என்ன என்றால் கல்லூரி நாட்களில் காதலித்து பிரிந்த ஜோடி இருவரும் திருமணம் ஆன பின் மீண்டும் சந்திக்க நேர, சில நாட்கள் பழைய காதலை நினைத்துச் […]

Read More

ஏலியன்ஸ் 2042 ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் ALIENS (1986) ஏலியன்ஸ் சிறந்த அறிவியல் புனை கதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது! இதுவரை இதை வைத்து பல தொடர் படம்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986) (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது! வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த […]

Read More

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில்.  இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர் சை.கௌதம ராஜ். ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக […]

Read More

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்கள் அறிவு, சக்தி, கர்மா..!

by on May 25, 2023 0

புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் […]

Read More
CLOSE
CLOSE